படைத்தவனே வியந்திருப்பான் போலும்!
அதனால் தான் என்னவோ
கண்திருஷ்டி படும் என்று எண்ணி
உன் உதட்டின் ஓரத்தில் மை வைத்து
அனுப்பி இருக்கிறான்…!
1 of 20
தமிழ் காதல் கவிதைகள் இமேஜ்
நான் இலக்கணம் தெரிந்து கவிதை
எழுதவில்லை என்றாலும் எழுதுகிறேன்.
நான் நம்புவது இலக்கணத்தை
அல்ல உன் அழகை…!
2 of 20
நான் கவிதை எழுத, நிலவோ,
இரவோ, மலரோ தேவை இல்லை.
நீ அசைந்தால் போதும்.
உன் கண் அசைந்தால் போதும்…!
3 of 20
நீ மையிட்டுக் கொள்கிறாய்
உன் கண்களுக்கு…!
நானும் மையிட்டுக் கொள்கிறேன்
என் பேனாவிற்கு…!
உன் மையிட்ட கண்கள் கவிதைகள்
பல கொடுக்கும் என்பதால்…!
5 of 20
நீ வண்ண கோலங்கள் அலங்கரித்துக்
கொண்டு இருக்க,
நான் என் எண்ண கோலங்களால் உன்னை
வர்ணித்துக் கொண்டு இருக்கிறேன்.
என் கவிதையின் கவியே…!
7 of 20
மழையில் நீ நனைந்தாய் என்று
சொல்வதை விட,
உன் அழகில் மழை நனைந்தது.
என்பது தான் சரியாக இருக்கும்.
8 of 20
மழையும் இல்லை, மழை சாரலும் இல்லை.
ஆனாலும் நான் நனைந்து போகிறேன்,
உன்னை கண்டதும். அங்கேயே நின்று விடு.
கிட்ட வந்தால் இதயம் வெடித்தாலும் வெடிக்கும்.
10 of 20
Tamil Kadhal Kavithaigal
இரவின் அழகை ரசிக்க
இரு கண்கள் போதாது.
உன்னுடன் நான் இருந்து
ரசிக்கும் இரவுகளுக்கு.
ஜென்மம் ஒன்று போதாது.
11 of 20
என் மனதில் என் கனவில்
என் நினைவில் என் அன்பில்
இன்றும் என்றும் என்றென்றும்
நீ மட்டுமே உயிரே…! ஐ லவ் யூ…!
12 of 20
உயிரின்றி உடல் வாழ முடியுமென்றால்.
காற்றின்றி சுவாசிக்க முடியுமென்றால்.
வானமின்றி உதயமொன்று நிகழுமென்றால்.
நீயின்றி நானும் வாழ்வேன்…!
13 of 20
கொஞ்சம் பேசு கெஞ்சி பேசு,
கொஞ்சி கொஞ்சி, கெஞ்சி பேசு.
பிஞ்சு மனம் பஞ்சு குணம்,
முத்தத்தீயில் மொத்தமும் எரியட்டும்.
14 of 20
திருடு போன இதயம் திருடு போன
பின் தான் திருடனை அறிந்து கொள்ளும்.
திருட்டு தவறு தான் என்றாலும்,
அந்த திருடனையே ஏற்றுக்கொள்ளும்.
இது தான் காதல் திருட்டு…!
15 of 20
கன்னி உன் அழகினில் கதி கலங்கி நிற்கிறேன்.
கனவினில் நான் கண்ட தேவதை நீ தானோ…!
கட்டழகி உன் மீது காதல் மொழி வீசி
கரங்கள் கோர்த்து கடைசி வரை
காலம் கடக்க கடவுளின் காலடியில்
கை கூப்பி நிற்கிறேன்…!
16 of 20
உதடுகள் பேச தயங்கும் வார்த்தைகளை,
விழிகள் பார்த்து விழிகள்
புரிந்து கொள்ளும் உன்னத உறவே காதல்.
18 of 20
என்னதான் மாயம் செய்தாயோ…!
இரவு என்பதையும் மறந்து இதயம்
இடம் மாறிக் கொண்டே இருக்கிறது.
தினமும் உன் நினைவில்…!
20 of 20


















