மறுபிறவி ஒன்று இருந்தால்
அதில் மனிதனாக வேண்டாம்
மனிதனாக வாழ்ந்த துன்பம் போதும்.
மரமாகவும் வேண்டாம்
ஏனெனில் மனிதர்கள் வெட்டிவிடுவர்.
விலங்காக வேண்டாம்
ஏனெனில் மனிதர்கள் கொன்றுவிடுவர்.
பறவையாக வேண்டாம்
ஏனெனில் மனிதர்கள் வேட்டையாடிவிடுவர்.
கல்லாக வேண்டாம்.
ஏனெனில் கல்லான என்னை
கடவுளாக்கி வேண்டுதலால் தொந்தரவு செய்வர்.
மொத்தத்தில் மறுபிறவியே வேண்டாம்
அழித்துவிடு என் ஆன்மாவை.
♥கடவுளுக்கு நன்றி♥
Thanks For Your Comment...