Type Here to Get Search Results !

15+ வாழ்க்கை கவிதைகள் - Tamil Life Quotes 2024

| தமிழ் லைப் Quotes | Tamil Quotes For Life | Tamil Life Sms | வாழ்க்கை சிந்தனைகள் | Tamil Quote About Life | Life Quotes in Tamil |

வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்.
சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள்.
பலர் அதையும் கேட்பதில்லை.
1 of 15

வாழ்க்கை அடுத்த நொடியில்
ஆயிரம் ஆச்சரியங்களை
ஒளித்து வைத்திருக்கிறது.
சிலவற்றை சந்தோஷங்களாக.
சிலவற்றை சங்கடங்களாக.
2 of 15

பிரபல்யமும், செல்வமும்
கடல் நீரைப் போன்றது...!
அதனைக் குடிக்கக் குடிக்க
தாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
3 of 15

தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும்
எவ்வளவுக்கு எவ்வளவு
குறைத்துக் கொள்கிறோமோ...
அவ்வளவுக்கு அவ்வளவு
மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்...
4 of 15



விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்...
விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்...
இவை தான் மனிதனின் எண்ணங்கள்...!
5 of 15

பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்
என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள்.
ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்.
6 of 15

பழிவாங்குதல்
வீரம் அல்ல, மன்னித்து
அவரை ஏற்றுக்கொள்வதே வீரம்...
7 of 15

பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது.
பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது.
அதேபோல் தான்.
நாம் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது.
நம் சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்.
8 of 15


வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும்.
எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும்.
ஆனால் எதுவும் மறந்து போகாது...!
9 of 15

ஞானிகள் ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்ந்தாலும்.
உன் வாழ்க்கையில் உன் அனுபவங்களே உன்னை
ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது.
10 of 15

காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை.
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே...!
11 of 15

அனைவர்க்கும் இனிமையாக இருக்க
அந்த இறைவனானாலும் கூட முடியாது.
அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும்
இருக்க முயற்சி செய்...
12 of 15


எந்த செயல் செய்தபோதிலும்
திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்.
உன்னிடம் பணம், பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இந்த திறமையின் மூலம் ஜெயித்து விடலாம்.
வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம்.
13 of 15

வாழ்க்கை என்னும் நதியின்
இருபுறமும் இருப்பது
கரை என்னும் நம்பிக்கை...!
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை...!
14 of 15

கொடுப்பது சிறிது என்று தயங்காதே.
வாங்குபவர்க்கு அது பெரிது.
எடுப்பது சிறிது என்று திருடாதே.
இழப்பவர்க்கு அது பெரிது.
15 of 15


Top Post Ad

Below Post Ad