அப்துல்கலாம் பொன்மொழிகள் | தத்துவங்கள் | சிந்தனைகள் | Tamil Quotes By Abdul Kalam
AdminAugust 10, 2020
Tamil Quotes | Abdul Kalam | Life Quotes | Motivation Quotes | Inspiration Quotes
இந்தியாவின் 11 ஆவது ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் அவர்கள். மறைந்தாலும், இன்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார். உழைப்பால் உயர்ந்தவர் மிகவும் எளிமையானவர் பலருக்கு முன்மாதிரியாகவும் வாழ்ந்தவர். அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் பொன்மொழிகள்.
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.
ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..!
- அப்துல் கலாம்
1 of 13
ஒரு மெழுகுவர்த்தி மற்றொரு
மெழுகுவர்த்திக்கு ஒளி கொடுப்பதால்
அதற்கு இழப்பு ஒன்றும் இல்லை.
- அப்துல் கலாம்
2 of 13
கனவு காணுங்கள்!
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில் காண்பது அல்ல.
உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு.
- அப்துல் கலாம்
3 of 13
கனவு காண்பவர்கள்
அனைவரும் தோற்பதில்லை,
கனவு மட்டுமே காண்பவர்கள்
தான் தோற்கிறார்கள்.
- அப்துல் கலாம்
4 of 13
நம்பிக்கை நிறைந்த
ஒருவர் யார் முன்னேயும்,
எப்போதும் மண்டியிடுவதில்லை.
- அப்துல் கலாம்
5 of 13
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.
அது உன்னை கொன்று விடும்,
கண்ணை திறந்து பார் அதை நீ வென்று விடலாம்.
- அப்துல் கலாம்
6 of 13
நாம் அனைவருக்கும்
ஒரே மாதிரி திறமை
இல்லாமல் இருக்கலாம்
ஆனால் அனைவருக்கும்
திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
- அப்துல் கலாம்
7 of 13
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்,
உன் உழைப்பால் நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்.
நீ நீயாக இரு.
- அப்துல் கலாம்
8 of 13
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும்
வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது
உங்கள் கைகளில் தான் உள்ளது.
- அப்துல் கலாம்
9 of 13
உன் கை ரேகையைப் பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே.
ஏனென்றால், கையே இல்லாதவனுக்குகூட
எதிர்காலம் உண்டு.
- அப்துல் கலாம்
10 of 13
வெல்வோம், சாதிப்போம்,
வேதனைகளை துடைத்தெறிவோம்
எந்தை அருளால் எதுவும் வசமாகும்...!
- அப்துல் கலாம்
11 of 13
வாழ்க்கை என்பது...!
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதீர்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு லட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக் கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்.
- அப்துல் கலாம்
12 of 13
ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று
உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான்.
ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி
என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.
-அப்துல் கலாம்