HomeTamil Kadhal Kavithaigal99+ தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kadhal Kavithaigal 2024 99+ தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kadhal Kavithaigal 2024 Admin June 04, 2024 0 Kadhal Kavithai For Lover | Kadhal Kavithai For Wife | காதல் கவிதைகள் நித்தம் ஒரு கவிதையால்நீ ஜனனம் ஆகிறாய்...!புத்தம் புது புன்னகையால்நான் கவிஞன் ஆகிறேன்...! 1 of 25 உன் முகம் பார்த்து விட்டால் போதும்,பல யுகங்களை கூட சுகங்களாக கழித்திடுவேன்.வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து. 2 of 25 எழுத இடம் கொடுத்தால் எழுதிடுவேன்.கவிதையினை முத்தமாய்.மொத்தமாய்...! 3 of 25 முகம் பார்த்து வந்த காதல்மறைந்து விடும்.பணம் பார்த்து வந்த காதல்பறந்து விடும்.உள்ளம் பார்த்து வந்த காதல்உயிர் உள்ள வரை தொடர்ந்து வரும். 4 of 25 யார் இந்த தேவதை...!உறங்கும் விழிகளுக்குள் கனவை கொண்டு வருவது.கனவை தந்து விட்டு என் நினைவை கொண்டு செல்கிறாள்.கனவுலகிலயே என்னை சஞ்சரிக்க வைக்கிறாள்.கற்பனையில் என்னை மிதக்க வைக்கிறாள்.யார் இந்த தேவதை...! 5 of 25 வழி பார்த்து நடக்காமல்,உன் விழி பார்த்து நடந்ததால்.வழுக்கி விழுந்தேன் அடிகாதல் என்னும் பள்ளத்தில்...!கை தூக்கி விடுவாயா கரைசேர.? 6 of 25 அன்று நான் தனியாக இருந்தாலும்உன் நினைவின்றி நிம்மதியாக இருந்தேன்!இன்று கூட்டத்திற்குள் நின்றாலும் உன் நினைவால் தனியாக உணர்கிறேன்! 7 of 25 உன் பார்வையில் பற்றி எரியும் தீக்குச்சி நான்.எரிந்து கொண்டே இருப்பேன்.நீ திரும்பிவந்து அனைக்கும் வரை அல்ல.நீ விரும்பிவந்து அணைக்கும் வரை. 8 of 25 உன் மீதான என் காதலைவார்த்தையில் சொல்வதை விட.வாழ்ந்து காட்டுவதே சிறப்பு....??? 9 of 25 நீயோ அதிசயமானவள்.நான் அந்த அதிசயத்தைகற்கும் அதிசய மாணவன். 10 of 25 உன்னுடன் பேசும் போதுநாட்கள் இப்படியே நீளாதாஎன்று ஒரு ஏக்கம் என் மனதில். 11 of 25 அரை நொடி வாழ்ந்தாலும் உன்அரவணைப்பில் நான் வாழ வேண்டும்.அடுத்த நொடி மரணம் வந்தாலும்உன் மார்பில் சாய்ந்து நான் சாக வேண்டும். 12 of 25 உன் குறும்பு பேச்சில் தொலைந்துபோனதடி என் இரும்பு இதயம்...!உனக்கு பிடிக்கிறதா பிடிக்கலையாதெரியாமலே ரசிக்குதடி என்இதயம் உன்னை...! 13 of 25 நீ கடல் கடந்து போனாலும்,கடல் தாண்டியும் வருவேனடிஉன்னை கவர்ந்து செல்ல💞...! 14 of 25 எட்டிப் பார்த்தேன்.தட்டிப் பறித்து விட்டாய்.என் குட்டி இதயத்தை💖💘....! 15 of 25 உலகில் உள்ள அனைத்து பூக்களின்வாசங்களும் சற்று குறைவு தான்.உன் கூந்தல் சூடி பின் வாடிப்போனஅந்தப் பூக்களின் வாசத்தின் முன்..! 16 of 25 மானும் மீனும் வாழும் கண்ணில்என்னை வைத்தாய்.தேனும் பாலும் ஊறும் சொல்லில்அன்பை வைத்தாய்.ஊனும் உயிரும் எல்லாம் எந்தன்உறவில் வைத்தாய்.ஈர் உயிரை ஓர் உயிராக்கிபுத்துயிர் தந்தாய். 17 of 25 எழுதிட முடியவில்லை எழுதி எழுதிஎழுது கோலும் ஏங்கி போனது.கவி வரிகளும் நீண்டு போனது.உன் அழகை கண்டு💃🖋️...! 18 of 25 வாசலில் உன் கை பதித்தகோலத்தை விட,உன் கால் பதித்த கோலம் அழகு. 19 of 25 அன்பே! உன்னை விட அழகியாரும் இல்லை என்று,அந்த கிளியோபாட்ரா விடம்சொன்னால் கூட தவறில்லை. 20 of 25 நீர் இன்றி அமையாது இவ்வுலகம்.நீ இன்றி அமையாது என் உலகம். 21 of 25 உன் காந்த பார்வையால்எனை சுண்டி இழுக்கிறாய்.சிலிர்த்தது என் நெஞ்சம்.அடைந்தேன் உன்னிடம் தஞ்சம். 22 of 25 வானில் நிலவை காணவில்லையாம்விண்மீன்கள் என்னிடம் சொன்னது.நான் எப்படி சொல்வது!நிலவு என்னுடன் இருப்பதை...! 23 of 25 உன் விழி கொண்டுகவிதைகளை வீசிஎன் இதயம் திருடும்இந்த பிரபஞ்சத்தின்பேரழகி நீ...! 24 of 25 மழை வந்ததும் கப்பல் வடித்துஅனுப்பும் சிறுபிள்ளை போல்,உன் நினைவு வந்ததும் கவிதைவடித்து அனுப்புகிறேன் உனக்கு. 25 of 25 Tags Tamil Kadhal Kavithaigal Newer Older
Thanks For Your Comment...