நானும் வேலைக்கு சென்றிருப்பேன் பணம் இருந்தால்.
பணம் கொடுத்தவனிடம் ஏமாறாமல் இருந்திருந்தால்.
ஏமாற்றியவனை விட்டதும் இல்லை.
இன்று என்னை தூற்றும் உலகம் போற்றி இருக்கும்,
நான் வேலைக்கு சென்றிருந்தால்.
கிழடு தட்டிய பின்னும் என்னை தாங்கும் தாய் தந்தைக்கு நன்றி.
உங்களால் முடிந்ததை மூன்று வேளையும் செய்தீர்கள்.
என் நிலை எண்ணி பல நாள்
ஊதாரியாக சுற்றி விட்டேன் நானும்.
சிரித்தவனை எல்லாம் நட்பு என்று நம்பி ஏமாந்து விட்டேன்.
முன்பு சிரித்தவனும் சிரிக்க மறந்து கடந்து செல்கிறான்.
நட்பும் உறவும் தூரமானது, தூரமானது தூரமாகவே இருக்கட்டும்.
பிறருக்கு உதவ தயங்கியதில்லை, எனக்கு உதவ யாரும் இல்லை.
கை ரேகையை கூட நம்பியதில்லை, இப்போது தலை ரேகையை கூட நம்ப வைத்து விட்டது வாழ்க்கை.
அனைத்தையும் கொடுக்க மறுந்த இறைவன் என் உயிரை மட்டும் எடுக்க மறந்து விட்டான்.
என் உயிர் என்னிடம் இருக்கும் வரை என் வெற்றி என் கையில் தான்.
காலம் கடந்து வந்தாலும் வெற்றி வெற்றி தான். அனால் இளமை மட்டும் கடந்திருக்கும்.
இங்கு நல்லவன் கெட்டவன் என்பது எல்லாம் பணம் மட்டுமே.
முயற்சியை மட்டுமே மூலதனமாக கொண்டு உளைப்பவரில் நானும் ஒருவன்.
என் வலிகள் பலவற்றை வரிகளாக்க முயற்சிக்கிறேன்.
என் ஆறுதலுக்காக.
பிடித்தாலும் எதுவும் செய்ய வேண்டாம்.
பிடிக்கவில்லை என்றாலும் எதுவும் செய்ய வேண்டாம்.
அப்படியே விட்டு விடுங்கள் என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொள்கிறேன்.
என் நிலை உணர முடியா நீங்கள் எனக்கு பதறுகள் தான்.
உங்கள் கண்கள் இன்று மூடிக் கொண்டது.
என் கண்கள் நாளை மூடிக்கொள்ளும்.
ஆடி அடங்கும் வாழ்க்கை தான் ஆனால் ஓய்ந்து இருத்தல் ஆகாது.
Enna innaiku content kedaikala pola🤔
ReplyDeleteThanks For Your Comment...