Type Here to Get Search Results !

என் அனுபவத்தில் | My Life Experience

காதல்:
அது வந்தது என் வாழ்விலும் ஒருமுறை.
பணம் இருக்கும் வரை நிலைத்தது
பணம் இல்லை என்றதும் பறந்தது.
பணம் தான் அதன் தேவை என்றால்
பிறகு நான் எதற்கு அதற்கு.

அன்பு:
தேவையின் நிமிர்த்தம் மட்டுமே தேடி வரும்.

பணம்:
நான் பணத்தை மதித்ததில்லை.
அதுவும் நிலைத்ததில்லை.
இல்லாததை நான் மதிக்க
அவசியமும் இல்லை.

நட்பு:
"உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் இவன் என் நண்பன்".
என்று சொல்லவே யோசித்தது.

உறவு:
கொடுத்து நிறையாது.
கொடுத்த ஏதும் திரும்பி வராது.

உலகம்:
இங்கு வாழ குறைந்த பட்ச தகுதிகளான
பொய் பித்தலாட்டம் உன்னிடம் இல்லை என்றது.
அதனால், உனக்கு இங்கு வாழும் தகுதி இல்லை என்றது.

மக்கள்:
பெற்றுக் கொள்ள ஏதும் இல்லாததால்
விலகி செல்ல தயங்கவில்லை.

இறைவன்:
படைப்பது மட்டுமே என் வேலை.
அனுபவிப்பது உன் வேலை என்று சொல்லி விட்டான்.

துணை:
எதிர் பார்த்து ஏமாறவும் விருப்பம் இல்லை.
ஏமாற்றவும் விருப்பம் இல்லை.

வாழ்க்கை:
அது செல்லும் தூரம் வரை நானும் செல்வேன்.

தோல்வி:
வாழ்க்கை முழுவதும் அதுதான்.
என் பல தோல்விக்கு கரணமும் நான் தான்.

வெற்றி:
பிடிக்காதவர் யாரும் இல்லை.
எதிர்பார்த்து ஏமாற்றமே மிச்சம்.
கிடைத்ததையும் பயன்படுத்திக்
கொள்ளாமல் விட்டு விட்டேன்.

தனிமை:
எனக்கு ஆறுதல் துணை இவன் மட்டுமே.

எதிர்காலம்:
அது காலம் கடந்து வந்து பயனும் இல்லை.
அதை ஒரு கை பார்க்காமல் விடுவதாகவும் இல்லை.

வாழ்க்கை கற்று தரும் பாடம் அதிகம்.
நிலை தாழும் முன் கற்றது குறைவு,
நிலை தாழ்ந்த பின் கற்றது அதிகம்.

Valkkai

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad