Type Here to Get Search Results !

27 காதல் தோல்வி கவிதைகள் | Tamil Sad Love Quotes

காதல் என்ற மூன்றெழுத்தில்
காவியம் படைத்து
கவி வடிக்க என்னோடு கலந்தவள்.
என்னை கண்ணீரில் கவி வடித்து
காவியம் படைக்க வைத்து
சென்று விட்டாள் வெகு தூரம்.
1 of 27
Sad tamil love quote

மென்மையான ரோஜாவை காதல்
என்று கையில் ஏந்தினேன் நான்.
அதன் முட்கள் என் இதயத்தை
குத்தி கிழிக்கும் என்று அறியாமல்.
2 of 27
Tamil sad kadhal kavithai

கதை பேசி கனவுகள் தந்தாய்🚶💕.
கனவுகள் தந்து நினைவுகளை தின்றாய்🚶🤔.
நினைவுகளை தின்று கவிதைகள் பல தந்து🖋️
காணாமல் போகிறாய் ஏனடி அடி ஏனடி💃
3 of 27
Tamil sad love quote

நீ என்னில் பாதி என்று எண்ணி
இருந்தேன் இதுவரை.
இன்று தான் புரிந்தது,
உனக்கு நான் மீதி தான் என்று.
4 of 27
Tamil sad love quote

நம் பெயர்களை செதுக்கிய மரம் கூட
இன்னும் பசுமையாக உள்ளது.
காய்ந்து போன நம் காதல் போல் இல்லாமல்.
5 of 27
Sad love quote in tamil

இதயத்தில் இருந்தால் கூட
மறந்து விடலாம்.
ஆனால், துடிக்கின்ற இதயமே
நீயாக இருந்தால் எப்படி மறப்பது.!
இறப்பது தான் உன்னை மறப்பது.!
6 of 27
Tamil sad love quote

காதலில் தோற்றவர்கள் எல்லாம்
காதலை மறந்து வாழவில்லை
மனதுக்குள் மறைத்து தான்
வாழ்கிறார்கள்.🚶💕💃
7 of 27
Kadhal tholvi kavithai

அழும் போது ஆறுதல்
சொல்வதில் ஆரம்பித்த காதல்,
ஆறுதல் சொல்லக் கூட
💔ஆள் இல்லாமல் முடிகிறது.💔
8 of 27
Tamil sad love quote

பேசிப் பேசி சிரிக்க வைத்து
என் சோகத்தை தூசிபோல்
தட்டி விட்டவள்.
இப்போது!
உறங்கி விட்டாளோ!
என்னை உறங்க விடாமல்
நினைவுகளுடன் பேச விட்டு.
9 of 27
Tamil sad love quote


கனவுகள் கலைந்ததடி,
காட்சிகள் முடிந்ததடி,
இதயம் வலிக்குதடி,
கண்கள் கலங்குதடி,
உதிரம் சிந்துதடி,
மனது கனக்குதடி,
நீ எங்கே சென்றாயோ!
10 of 27
Tamil sad love quote

நீ எனக்குள் விதைத்து சென்ற காதலுக்கு,
என் கண்ணீர் தான் தண்ணீர் போலும்!
அதனால், நான் போகும் கல்லறைக்கு
என் கண்ணீர் தான் பன்னீர் போலும்..!
11 of 27
Tamil sad love quote

எல்லோரும் உன்னை காதலித்து,
விட்டு போனர்கள்...!
நான் மட்டும் உன்னை காதலித்து
விட்டு, பரிதவித்து போனேன்...!
உன்னுடன் வாழ வேண்டும் என...!
12 of 27
Sad love quote in tamil

...::என்னவள்::...
அழகான தருணத்தில் அளவில்லா காதலயும்.
மறக்கமுடியா தருணத்தில் மரண வலியையும் தந்தவள்.
வாழ்க்கைக்கு வசந்தமாக வந்தவள்.
காரணம் ஏதும் சொல்லாமல்
காற்றோடு காற்றாக கலைந்து சென்றவள்.
13 of 27
Tamil sad love quote

அவள் அன்புக்கு விலை
அதிகம் என்பதால் தான்.
இந்த ஏழையால் விலை
பேச முடியாமல் போய்விட்டது.
14 of 27
Kadhal soga kavithai

இருந்திக்கலாம் இன்னும்
சில  காலம் என்னோடு.
சிரித்து வாழ்ந்திருப்பேன்
💃💘நானும்.💘🚶
15 of 27
Tamil soga kavithai

கடந்த கால காதல் நினைவுகளை
கடப்பது, கடலை கடப்பதை விட
கொடுமை தான் போலும்...!
16 of 27
காதல் சோகக் கவிதை

நான் காதலித்ததன் விளைவாக
கவிதை எழுதுவது பழக்கமாகிவிட்டது.
கண்ணீர் விடுவது வழக்கமாகிவிட்டது.
காதல் மட்டும் கண்ணுக்கு தெரியாத
காற்றாகி கரைத்து மறைந்து விட்டது...!
17 of 27
Kadhal soga kavithai

பாழாய் போன மனம்
உன்னை நினைத்து
தானாய் கறையுது.
ஏதேதோ சொன்னாலும்
ஏனோ அடங்க மறுக்குது.
கனவிலும் உன்னை
தேடி தனியே அலையுது.
அங்கும் உன்னை காணாமல்
தவியாய் தவிக்குது.
18 of 27
Tamil sad love kavithai


உன் கன்னம் தொட்ட என் கைகள்
வேறொரு கன்னம் தொட மறுக்கிறது.
காரணம் உன்னை தொட்டதற்காக அல்ல,
தொட்டதனால் நான் பட்ட வேதனைகள்
மீண்டும் வேண்டாம் என்பதற்காக...!
19 of 27
Tamil sad love quote

நீ என்னை மறந்தாலும், மறுத்தாலும்,
வெறுத்தாலும், விட்டு விலகிப்போனாலும்,
வாழ்ந்திருப்பேன் கற்பனையில்
உன் நினைவுகளோடு.
காத்திருப்பேன் கல்லறையிலும்.
உன் காதலோடு...!
"இது கவிதைக்காக மட்டுமே"
20 of 27
Tamil love quote sad

நான் ஏங்காத நாள் இல்லை,
உன்னை எண்ணி...!
என் இணையே என் துணையே
எனை மீட்டு விடு. மீட்டு தந்து விடு.
மீண்டும் வந்து விடு எனக்காய்💘...!
21 of 27
Tamil sad love kavithai

உனது முகூர்த்த ஓலையில்
இடம் இருந்தால்,💌
எனது மரண ஓலையையும்
🖋️சேர்த்து எழுதிவிடு அன்பே.💘
22 of 27
திருமண அழைப்பிதழ் சோகக் கவிதை

கண்ணீர் வடிக்க தயாராக இல்லை
கண்மணியே நீ போய்விடு..!
கால்கள் போன போக்கில் போக போகிறேன்.
கொஞ்ச நாள் என்னை வாழவிடு..!
23 of 27
Tamil sad love kavithai

பாறையாக இருந்த என் மனதில்,
காதலை ஊற்றெடுக்க செய்ததும் நீதான்.
காதல் ஊற்றில் கல் வைத்து அடைத்ததும் நீதான்.
24 of 27
Tamil love sad quote

மறந்து விட்டாயா என்று கேட்டாய்?
எப்படி மறப்பேன்.
பேசும் உன் விழிகளை.
வதைக்கும் உன் இதழ்களை.
அணைக்கும் உன் கரங்களை.
சிதைக்கும் உன் புன்னைகைகளை.
எப்படியடி மறப்பேன் நான்.
25 of 27
Tamil sad quote for girlfriend

வலிகளை தா
தாங்கிக் கொள்கிறேன்.
பிரிவை மட்டும் தந்து விடாதே.
26 of 27
Tamil sad quote for lovers

வெந்து போன இதயத்தில் வந்து
வந்து தந்து செல்கிறாய்.
சில நேரம் கனவாய்,
சில நேரம் நினைவாய்,
சில நேரம் நிலலாய்.
ஒருமுறை வந்து போயேன் நிஜமாய்.
27 of 27
Tamil sad love quote for girlfriend

LOVE QUOTES IMAGE ENGLISH @Picsquote.Com

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad