சென்னை உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் சீரியல் நடிகை சித்ராவில் உடல் மீட்கப்பட்டது. அவர் இறப்பதற்கு 12 மணி நேரத்துக்கும் முன்பு வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருந்துள்ளார்.
நடிகை சித்ரா தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். நடிகை, மாடல், டான்சர், பாடகர், என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இறுதியாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஹேம்நாத் என்பவருக்கும் இவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்துள்ளது. சீரியலில் நடிப்பதற்காக சித்ரா சென்னை அருகேயுள்ள நாசரேத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். அவருடன் ஹேம்நாத்தும் தங்கி இருந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை, நடிகை சித்ரா ஹோட்டல் அறையில் இருந்து தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவமனை ஊழியர்களான அவரது ரசிகர்கள் அவரது உடலை பார்த்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கான காரணம் என்னவென்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகே உண்மை என்ன என்பது தெரியவரும்.
Thanks For Your Comment...