🚶சீதனம்💃
ஆண்மையை விலைபேசும்
ஆண்களை விட,
தன் உடலுக்கு விலைபேசும்
தாசி சிறந்தவள்.
மணமகனின் இயலாமைக்கு
மணமகள் கொடுக்கும் கூலி
தான் 'சீதனம்'.
தன்னால் இதுவரை சம்பாதித்து
வாங்க முடியாததை,
வரப்போகும் துணையின் மூலம்
கேட்டு வாங்குவதற்கு பெயர் தான்
"வரதட்சணை".
நீ ஆண் என்பதை நிருபிக்க முதல் தருணம்
வரதட்சணை வேண்டாம் என்பது.
அதை வாங்கி விட்டு உன்னை நீயே
ஆண் என்று சொன்னால் அது
சாத்தியமா நண்பா.
நாம் சாத்தியவாதி இல்லை அசாத்தியவாதி.
நினைவில் கொள் தட்சணை என்பது
நாம் கொடுப்பது.
வரதட்சணை என்பது கேட்டு வாங்குவது.
நாமே கொடுப்பது தானத்தில் வரும்.
கேட்டு வாங்குவது பிச்சையில் வரும்.
ஆண் இனமே உனக்கும் தாசிக்கும்
வித்தியாசம் என்ன?
வரதட்சணை கேட்பது தவறு என்றால்.
வசதியான மாப்பிள்ளை தான்
வேண்டும் என்று தேடுவதும்
தவறு தானே.
நண்பர்களே நாங்கள் யாரையும் குறை சொல்ல வில்லை. ஒருவேளை நீ முடமாக இருந்தால் வாங்கி தான் ஆக வேண்டும். இந்த பதிவு உங்களை குத்துவதாக அமைந்தால் பொறுப்பு நாங்கள் அல்ல. நம் சமுதாயம்.
Thanks For Your Comment...