Type Here to Get Search Results !

15 தமிழ் ஜோக்ஸ் | Tamil Jokes | Jokes In Tamil

திருமண மண்டபத்தில் எவ்வளவு ''டீசண்டா''
உக்காந்து இருந்தாலும்,
''பந்தி ஆரம்பிச்சாச்சி சாப்பிட வாங்க''
என்று குரல் கேட்ட உடன்.
நமக்குள்ள இருக்கிற ''ஆதிமனிதன்''
திடிரென வெளிய வந்து விடுகிறான்..!!

Tamil jokes

எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து
புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்க மாட்டோம்.
என்ன சார், அநியாயமா இருக்கு.
அப்ப, என் தலையில முடி வளர்ற வரைக்கும்
நான் புகாரே கொடுக்க முடியாதா?

Tamil funny Quotes

ஆண்கள் மனைவியாக எதிர்பார்ப்பது
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் மாதிரி
ஒரு பெண்ணை தான்.
ஆனால் அமைவது என்னமோ
பிக் பாஸ் சனம் மாதிரி
ஒரு பெண் தான்.

Tamil joke

மழை வந்ததும் கவிதை
வந்தால் அவன் கவிஞன்.
அதுவே காயப்போட்ட துணி
ஞாபகத்திற்கு வந்தால்
அவன் தான் குடும்பஸ்தன்.

Tamil funny quotes


செய்த தப்புக்கு மன்னிப்பு
கேட்டால் அவன் மனிதன்
செய்யாத தப்புக்கு மன்னிப்பு
கேட்டால் அவன் புருஷன்.

Tamil husband joke

நானும் அரைமணி நேரமா காந்தத்த
வெச்சிட்டு try பண்ணுறேன்...
😟😟😟😟😟
முடியலை...
பேரிச்சம் பழத்துல இரும்பு சத்து
இருக்கு ன்னு சொன்னவன்
கைல கிடைச்சான்... செத்தான்...
😖😖😖😖😖

Tamil memes

மகன்களை பெற்ற அம்மாவுக்கு
மட்டுமே தெரியும்.
அவனை மளிகை கடைக்கு அனுப்புனா.
மீதி காசு கைக்கு வராது என்று.

Tamil jokes

👳நோயாளி : டாக்டர் என்னால் முழுசா
இரண்டு இட்லி கூட சாப்பிட முடியல.
💉டாக்டர் : யாராலையும் ரெண்டு
இட்லி முழுசா சாப்பட முடியாது.

Tamil funny quotes


நானும் தான் செய்கிறேன்.
"தானம்" தினம் தினம்.
என் வீட்டு கொசுக்களுக்கு.

Joke tamil

"குண்டாக" இருக்கிறாய் என்று சொன்னால்
கோபப்படுவாள் என்ற நல் எண்ணத்தில்
சும்மா கும்முன்னு இருக்கா என்று சொன்னேன்.
அதுக்கு போய் பிளாக் பன்னிட்டா.

Tamil girlfriend joke

மனைவி நம்மிடம் எதிர்பார்ப்பது இரண்டு தான்.
பேசும் போது கேட்டுக்கிட்டே இருக்கனும்.
ஷாப்பிங் பண்றப்ப பார்த்துக்கிட்டே இருக்கனும்.

Tamil wife jokes

நபர் 1: கல்யாணம் நடக்குமா நடக்காதா
               என்று டாஸ் போட்டு பார்த்தேன்.
நபர் 2: தல விழுந்துச்சா இல்லை பூ விழுந்துச்சா.
நபர் 1: காசு உருண்டு போய்
              சாக்கடையில் விழுந்துருச்சி.

Marriage joke in tamil


பேய் கூட ஒப்பிட்டால் கூட சிரித்துக்
கொண்டே போய் விடும் பெண்கள்,
இன்னொரு பெண்னுடன்
ஒப்பிட்டால் மட்டும்
பேயாகவே மாறிவிடுகின்றனர்🌚🌝.

Woman tamil joke

ஒரு கால் உடைந்த ஒருத்தன்
ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகுறான்.
பக்கத்து பெட்ல உள்ளவனுக்கு
இரண்டு கால்லயும் பேண்டேஜ்.
பாவமாக பார்த்து எண்ணி கொண்டான்
ஒருவேளை அவருக்கு ரெண்டு
பொண்டாட்டி- ஆ இருக்கும் என்று.

Tamil wife jokes

வாழ்க்கை என்பது கீழே உள்ள
எழுத்துக்கள் போல்தான்.
ज़िन्दगी गुलज़ार है

சிலருக்கு புரியும் சிலருக்கு புரியாது.
உங்களுக்கு புரியுதா???

Tamil funny quotes

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad