HomeThirukkural Statusதிருக்குறள் அதிகாரம் 131 - புலவி - ஸ்டேட்டஸ் திருக்குறள் அதிகாரம் 131 - புலவி - ஸ்டேட்டஸ் Admin February 19, 2021 0 குறள் 1301:புல்லா திராஅப் புலத்தை அவருறும்அல்லல்நோய் காண்கம் சிறிதுமு.வ உரை:(ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக. குறள் 1302:உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுமிக்கற்றால் நீள விடல்மு.வ உரை:உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது. குறள் 1303:அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்மு.வ உரை:தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது. குறள் 1304:ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்றுமு.வ உரை:பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது. குறள் 1305:நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகைபூவன்ன கண்ணார் அகத்துமு.வ உரை:நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும். குறள் 1306:துனியும் புலவியும் இல்லாயின் காமம்கனியும் கருக்காயும் அற்றுமு.வ உரை:பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும். குறள் 1307:ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வதுநீடுவ தன்றுகொல் என்றுமு.வ உரை:கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது. குறள் 1308:நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்காதலர் இல்லா வழிமு.வ உரை:நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன? குறள் 1309:நீரும் நிழல தினிதே புலவியும்வீழுநர் கண்ணே இனிதுமு.வ உரை:நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது. குறள் 1310:ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்கூடுவேம் என்ப தவாமு.வ உரை:ஊடல் கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே. Tags Thirukkural Status Newer Older
Thanks For Your Comment...