HomeThirukkural Statusதிருக்குறள் அதிகாரம் 129 - புணர்ச்சி விதும்பல் - ஸ்டேட்டஸ் திருக்குறள் அதிகாரம் 129 - புணர்ச்சி விதும்பல் - ஸ்டேட்டஸ் Admin March 06, 2021 0 குறள் 1281:உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்கள்ளுக்கில் காமத்திற் குண்டுமு.வ உரை:நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு. குறள் 1282:தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்காமம் நிறைய வரின்மு.வ உரை:காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும். குறள் 1283:பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண்மு.வ உரை:என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை. குறள் 1284:ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துகூடற்கண் சென்றதென் னெஞ்சுமு.வ உரை:தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது. குறள் 1285:எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்பழிகாணேன் கண்ட இடத்துமு.வ உரை:மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன். குறள் 1286:காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காணேன் தவறல் லவைமு.வ உரை:காதலரைக் யான் காணும்போது (அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை. குறள் 1287:உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்பொய்த்தல் அறிந்தென் புலந்துமு.வ உரை:வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ? குறள் 1288:இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்கள்ளற்றே கள்வநின் மார்புமு.வ உரை:கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு. குறள் 1289:மலரினும் மெல்லிது காமம் சிலரதன்செவ்வி தலைப்படு வார்மு.வ உரை:காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே. குறள் 1290:கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்றுமு.வ உரை:கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, (பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள். Tags Thirukkural Status Newer Older
Thanks For Your Comment...