Type Here to Get Search Results !

21 அழகிய காதல் கவிதைகள் ஸ்டேட்டஸ்

நீ என்னை கண்டதும் முகத்தை
இருக்கமாக வைத்திருந்தாலும்,
என் உளவாளியான உன் கண்கள்
உன் காதலை என்னிடம் சொல்லி
விடுகிறது என் இனியவளே👁️👁️!
1 of 21
காதல் கவிதை

போர்க்களத்தில் போராடிட போதுமான
துணிவு என்னிடம் உண்டு.
ஆனால் போர்க்களத்தில் எதிரே
நிற்பதோ உன் இரு விழிகள்.
ஆயுதம் இன்றியும் யுத்தம் செய்யும் நான்
ஆயுதம் இருந்தும் தலை வணங்குகிறேன்.
உன்னிடம் மட்டும்.
நீ யாரிடமும் தலை வணங்காமல் இருக்க.
2 of 21
Kadhal Kavithai image

புவி அசைவில் கூட தடுமாறாத நான்
உன் விழி அசைவில் தடுமாறி இடம்மாறி
மொத்தமாய் சாய்ந்தேனடி.
3 of 21
Kadhal Kavithai For Girlfriend

தொல்லை செய்யாமல் நீ இருந்தாலும்.
ஒரு நொடி கூட பல யுகமாகி.
எல்லை தாண்டிட செய்கிறது.
4 of 21
காதல் கவிதை

கண் பேசும் வார்த்தைகள் புரியாதோ!
காத்திருப்பேன் என்று தெரியாதோ!
ஏன் எனை காக்க வைத்து தவிக்க விடுகிறாய்?
என் காதலே! வந்துவிடு என் அருகில்.
தந்துவிடுகிறேன் என்னை உனக்காக.
5 of 21
Kadhal Kavithai Status

என் கனவுக்குள் வரும் போது
சொல்லாமல் வருகின்றாய்:
எதை நான் கொடுப்பது.
என் கனவை விட்டு செல்லும் போது
சொல்லாமல் செல்கின்றாய்:
எதை நான் எடுப்பது.
 6 of 21
Kadhal Kavithai For Girlfriend

என்னை பிடிக்கவில்லை என்றே
சொல்லி இருக்கலாம் நீ.
பிடித்திருக்கிறது என்று சொல்லி
பார்க்கவும் முடியாமல் பேசவும் முடியாமல்
பித்துபிடிக்க வைத்து விட்டாயடி.
7 of 21
Tamil love quote image


நீ மட்டும் போதும் என
முடிவு செய்து விட்டேனடி.
இனி எதை இழந்தாலும்
உன்னை இழப்பதாய் இல்லை.
8 of 21
Tamil love status image

நாம் வாழும் வாழ்க்கைக்கு
அழகு சேர்ப்பது குடிசை வீடா
மாடி வீடா என்பது அல்ல காதல்.
நீ என் மீது கொண்ட அன்பு
மிகையானது என்பதே நம் காதல்.
9 of 21
காதல் கவிதை

நான் யோசித்து
எழுதும் கவிதைகள் கூட
நீ பேசும் வார்த்தைகளுக்கு முன்
வெறும் எழுத்துக்கள் ஆகி விடுகிறது.
10 of 21
காதல் கவிதை ஸ்டேட்டஸ்

உன்னை அணைத்திட துடித்தேன்.
நெருங்கிட தவித்தேன்.
துடிப்புடன் நின்று போகுமோ
💃என்💞தவிப்பு🚶!
11 of 21
Kadhal Kavithai Status Image

கண்சிமிட்டி போகும்
கலங்கரை விளக்கு நீ.
உன்னை காணாமல்
நடுக்கடலில்
தத்தளிக்கும் படகு நான்.
12 of 21
Kadhal Kavithai image


உன்னை நினைத்து நான் எழுதும்
கவிதைகள் எல்லாம் வெறும்
கவிதைகள் அல்ல.
நாம் காதல் கொண்டு, ஊடலும்,
கூடலும் இல்லாமல் பிறந்த
குழந்தைகள், என் கவிதைகள்.
13 of 21
காதல் கவிதை

என் வாழ்க்கையில் சோகம் வரலாம்!
கண்ணீர் வரலாம்!
ஏன் மரணம் கூட வரலாம்!
ஆனால், உன்னை மறக்கும்
சந்தர்ப்பம்
மட்டும் எக்காரணம் கொண்டும்
வந்துவிடவே கூடாது என் உயிரே!
14 of 21
Kadhal kavithai for girlfriend

நினைவுகள் சுகமானது என்பது
அனைவருக்கும் தெரியும். ஆனால்!
அது கனமான ரணமானது என்பது
சுமப்பவர்க்கு மட்டுமே தெரியும்.
15 of 21
Ninaivugal Kavithai Image

பெண்ணே நீ வளர்த்த மூன்றடி
கூந்தலில், நான் அளக்கும் ஒரு அடி
பூவுக்கு இடம் தருவாயா!
மலரும் மனமும் வாடும் முன்
16 of 21
Tamil Love proposal Quote

கை அளவு இதயம் தான்.
அதில் கடல் அளவு உன் நினைவுகள்.
சுமையாக அல்ல சுகமாக.
17 of 21
நினைவுகள் கவிதை


நான் எதை தொலைத்தாலும் அதை
மீட்டுத் தருவது உன் புன்னகை.
நான் எதை மறந்தாலும் அதை
மீண்டும் தருவது உன் நினைவுகள்.
18 of 21
Un ninaivugal Kavithai Image

என் விதி முடிந்து நான் மடிவதாக
இருந்தால் அது உன் மடியாக
இருக்க வேண்டும்
💃என் 👸💗🤵அன்பே🚶
19 of 21
தமிழ் காதல் கவிதை

அழியாமல் இருக்கிறது.
உன் நினைவுகளுடன் நான்
மட்டும் அழிந்து கொண்டிருக்கிறேன்.
20 of 21
Tamil Kadhal Kavithai

பிரியாத பிரியமுள்ள நினைவுகள்
என் நெஞ்சில் பிரியமுடன் சுற்றி திரிகிறதே!
நீ தூரம் சென்றாலும் செல்லாமல்
என்னையே சுற்றுகிறதே உன் செல்ல நினைவுகள்! என் செல்லம்மா!
21 of 21
Tamil Kadhal Kavithai ninaivugal

LOVE QUOTES IMAGE ENGLISH @Picsquote.Com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad