வலிகள் இல்லா வாழ்க்கை ஏது! வழிகள் இல்லா வலிகள் ஏது! கால நேரம் மாறும் போது, அனைத்தும் இங்கு மாறுமே..!
ஊக்குவிப்பதால் உயர்ந்தவர்களை விட, உதாசீனப்படுத்தியதால் உயர்ந்தவர்களே அதிகம், இந்த மாய உலகில்.
நல்லது மெதுவாகத்தான் நடக்கும். கெட்டது தான் உடனே நடக்கும். ஆதனால், எதிலும் பொறுமை அவசியம்.
நிறைவேறாத ஆசைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, காற்றில் பறக்க விட்டு விட்டு, நிம்மதியாக இருக்க வழி தேடுவோம்.
முதுகில் குத்தியவனை நினைத்து கவலை கொள்ளாதே. அவன் மனதில் குத்தும் அளவு உயர்ந்து வாழ்ந்து காட்டு.
சில பல ஏற்ற இறக்கங்களை கண்டதும், வாழ்க்கையே முடிந்து போனது போல் உடைந்து போகாதே. தண்ணீர் தடையை கண்டதும் புதிய தடத்தை உறுவாக்கி விடுகிறது.
வாழ்க்கை வாழ்வதற்கே! கிடைக்காததை நினைத்து மனதையும், உடலையும் வதைப்பதற்கு அல்ல. கிடைத்ததை பெற்றுக் கொள்! கிடைக்காததை விட்டுத் தள்!
ஆறுதல் தேடி அலையும் மனதுக்கு, மாறுதல் தந்து அன்பை கொடுங்கள். அன்புதான் ஆறுதல்.
"எந்த சோகத்தாலும் எனது புன்னகையை ஒன்றும் செய்ய முடியாது" என்ற கர்வம் உனக்குள் இருந்தால் நீயும் ஞானி தான்.
காயங்கள் இல்லாமல் கனவுகள் பிறக்கும். ஆனால் வலிகள் இல்லாமல் வழிகள் பிறக்காது.
அடுத்தவனுக்காக ஓடி ஓடாய் தேய்ந்தது போதும். இனி மூச்சை பிடித்து ஓர் ஓட்டம், உன் இலக்கை நோக்கி உனக்காய், மூச்சே நின்றாலும் கவலை இல்லை என்று.
உழைத்து உயர்ந்தால் பன்மையில் பேசுவான். தடுமாறி தாழ்ந்து வீழ்ந்தால் ஒருமையில் பேசுவான். இவ்வளவு தான் இந்த பச்சோந்தி கூட்டத்தின் ஆகப்பெறும் சாதனை.
தன்னம்பிக்கையை துணையாக கொண்டவனுக்கு, ஆறுதல் சொல்ல வேறொருவன் தேவையே இல்லை. அவனுக்கு ஆக்கமும் ஊக்கமும் ஆறுதலும் அவனே.
வாழ்க்கை என்னும் புத்தகத்தில் இன்பம், துன்பம் என்ற இருபக்கங்கள் இருந்தே தீரும். இரண்டில் எது ஒன்று இல்லை என்றாலும், நாம் நம் வாழ்க்கையை முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம்.
இலக்கு உயரமாக இருந்தால், தடைகள் அதிகமாகத்தான் இருக்கும். அடைந்தே தீரவேண்டும் என்றால், தடைகளை கடந்து தான் ஆகவேண்டும்.
பிரச்சினை இல்லாத மனிதர்களே இங்கில்லை, "விரலுக்கு தக்க வீக்கம்" என்பது போல் ஆளுக்கு தக்க பிரச்சினைகள். அவைகளின் வடிவங்கள் மட்டுமே வெவ்வேறு. எந்த பிரச்சினையாக இருந்தாலும், அதை கடந்து வர ஒரு வழியாவது இருக்கும். இல்லை அதை ஏற்கனவே கடந்தவர் ஒருவராவது இருப்பார். அவர் வழியை துணையாக கொண்டு நாமும் கடந்து விடலாம். இல்லை தத்துவ ஞானிகளின் தத்துவங்களை படித்தால் அதிலிருந்து கூட வழிகள் பிறக்கும் இல்லை வலிகள் குறையும். யார் போற்றினாலும் யார் தூற்றினாலும் நாம் நம் வேலையை தொடர்வோம்.
Thanks For Your Comment...