உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும். - சாக்ரடீஸ்
1 of 17
எதையும் மன்னிக்கும் ஒரே நீதிமன்றம் தாயின் இதயம் மட்டுமே. - சாக்ரடீஸ்
2 of 17
தன்னைப் பூரணமாக அறியாதவன், பிறரை ஒரு நாளும் சரியாக அறிய முடியாது. - சாக்ரடீஸ்
3 of 17
இசையை ரசிக்க தெரிந்தவர்கள், வாழ்க்கையையும் ரசிக்க தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். - சாக்ரடீஸ்
4 of 17
நீங்கள் நேசிக்க படவேண்டும் என்று விரும்பினால், முதலில் நீங்கள் மற்றவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். - சாக்ரடீஸ்
5 of 17
மனம் அழகாக இருந்தால், காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும். - சாக்ரடீஸ்
6 of 17
பணிவு வேண்டும், ஆனால் கோழைத்தனம் கூடாது. துணிவு வேண்டும், ஆனால் தலைக்கனம் கூடாது. - சாக்ரடீஸ்
7 of 17
தீங்கிழைத்தவன் தன் வசம் சிக்கிய போதிலும்,
அவனை மன்னிப்பவனே
இறைவனுக்கு நெருக்கமாகிறான்.
- சாக்ரடீஸ்
8 of 17
எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டும் சோம்பேறி அல்ல, தன்னால் முடிந்ததை செய்யாமல் இருப்பவனும் சோம்பேறி தான். - சாக்ரடீஸ்
9 of 17
சோம்பலுடனும் சோர்வுடனும் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட, ஒரு நாளேனும் பெறு முயற்சியுடன் வாழ்ந்திருத்தல் மேலானது. - சாக்ரடீஸ்
10 of 17
பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன், தன் குறையைக் காண்பவன் முழு மனிதன். - சாக்ரடீஸ்
11 of 17
பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விடலாம். தற்பெருமை பேசுபவனை மட்டும் திருத்தவே முடியாது. - சாக்ரடீஸ்
12 of 17
உனது அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்ளவிட்டால், அது உன்னை அழித்துவிடும். - சாக்ரடீஸ்
13 of 17
புரிந்து கொள்ளாதபோதும், பொறாமைப்படும் போதும், மனிதன் மற்றவனை முட்டாளாகக் கருதி விடுகிறான். - சாக்ரடீஸ்
14 of 17
எப்படி இருந்தாலும் திருமணம் செய்து கொள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பாய். மோசமான மனைவி கிடைத்தால் நீ அறிஞனாவாய். - சாக்ரடீஸ்
15 of 17
மற்றவர்களால் முடியாததை செய்து காட்டுவது திறமை. திறமையால் முடியாததை செய்து காட்டுவது மேதாவித்தனம். - சாக்ரடீஸ்
16 of 17
நல்லது போனால் தெரியும். கெட்டது வந்தால் தெரியும். - சாக்ரடீஸ்
17 of 17
Thanks For Your Comment...