பெயர்: வில்லியம் ஷேக்ஸ்பியர்
பிறப்பு: 26 ஏப்ரல் 1564
இறப்பு: 23 ஏப்ரல் 1616
உன்னை தவிர வேறு யாரையும் கண்டு, நீ எச்சரிக்கையாக இருக்க தேவை இல்லை. - ஷேக்ஸ்பியர்
1 of 16
நீ செல்லும் பாதையை சரியாக தேர்ந்தெடு. பிறகு அந்தப் பாதையில் உன் பயணத்தை தொடங்கு. - ஷேக்ஸ்பியர்
2 of 16
நாம் யார் என்பது நமக்குத் தெரியும், ஆனால் யாராக கூடும் என்பது நமக்குத் தெரிவதில்லை. - ஷேக்ஸ்பியர்
3 of 16
மனிதனின் தீய குணங்களைப் பித்தளைத் தட்டில் பொறிக்கிறோம். அவர்களின் நற்குணங்களை ஓடும் தண்ணீரில் எழுதுகிறோம். - ஷேக்ஸ்பியர்
4 of 16
எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், சிலரிடம் நம்பிக்கை வையுங்கள். யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். - ஷேக்ஸ்பியர்
5 of 16
நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணும் தங்களையே பார்ப்பதாக எண்ணுவார்கள். - ஷேக்ஸ்பியர்
6 of 16
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டு கொள்வது தான் வளர்ச்சியின் அடையாளம். - ஷேக்ஸ்பியர்
7 of 16
எவர் பேசுவதையும் கேட்டுக்கொள். ஆனால் சிலரிடம் மட்டும் பேச்சு கொடு. எவர் கஷ்டத்தையும் தெரிந்து கொள். ஆனால் உன் கருத்தைக் கூறிவிடாதே. - ஷேக்ஸ்பியர்
8 of 16
தண்ணீரில் ஏற்படும் அலைகள் பெரிதாகி கடைசியில் மறைந்து விடும். அதுபோல, புகழ் பெருகி கடைசியில் ஒன்றுமில்லாமல் மறைந்து விடும். - ஷேக்ஸ்பியர்
9 of 16
வைத்துக்கொள்ள எதுவும் இல்லையென்றால், இழப்பதற்கும் எதுவுமில்லை. - ஷேக்ஸ்பியர்
10 of 16
அனுபவம் ஓர் உயர்ந்த நகை. அது அறியதாகத்தான் இருக்கும். ஏனெனில் மிகவும் கூடுதலான விலை கொடுத்தே அதை வாங்க வேண்டியதாயிருக்கின்றது. - ஷேக்ஸ்பியர்
11 of 16
ஏழையானாலும் உள்ளத்தில் போதிய திருப்தி இருந்தால், அதுவே பெரிய செல்வமாகும். - ஷேக்ஸ்பியர்
12 of 16
கோழை பலமுறை செத்துப் பிழைக்கிறான். ஆனால் வீரன் ஒருமுறை தான் சாகிறான். - ஷேக்ஸ்பியர்
13 of 16
ஒவ்வொரு தடவையும் விழுவது, மீண்டும் எழுவதற்கே என்று நம்புங்கள். - ஷேக்ஸ்பியர்
14 of 16
தைரியமே நம்முடைய மிக நெருங்கிய நண்பன். - ஷேக்ஸ்பியர்
15 of 16
காதல் வசப்பட்டவர்களும், கவிதை வசப்பட்டவர்களும், கள் வசப்பட்டவர்களும், சும்மா இருக்க மாட்டார்கள். - ஷேக்ஸ்பியர்
16 of 16
Thanks For Your Comment...