Usefull Quotes In Tamil | Social Quotes In Tamil | Advice Quotes In Tamil
மக்களுக்கு சேவை செய்யவே ஆட்சி, அதிகாரம், பதவி எல்லாம். பதவியில் அமர்ந்த பின் சுமைகளை மக்கள் மேல் வரியாகவும் சட்டமாகவும், சத்தமாகவும் நிறைவேற்றுவதற்கு அல்ல.
1 of 27
அரசியல் என்பது வேலை அல்ல சேவை. அந்த சேவை தன் வீட்டுக்கானது அல்ல. தன் நாட்டுக்கும் அதன் மக்களுக்குமானது.
2 of 27
சாதி மற்றும் மதம் போன்றவை, ஒரே இனத்தின் மக்களை, பல பிரிவுகளாக பிரித்து ஆள பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்.
3 of 27
காணிக்கை என்பது: ஆறு அறிவுக்கு தலைமுடி. ஐந்து அறிவுக்கு தலை. மனிதனையும் அவன் சட்ட திட்டங்களையும் புரிந்து கொள்ள இதுவே ஆகச்சிறந்த உதாரணம்.
4 of 27
கடவுள் இருப்பது கல்லிலோ, மரத்திலோ, மண்ணிலோ இல்லை. மனிதநேயத்திலும் மனிதாபிமானத்திலும் தான்.
5 of 27
அஞ்ச வேண்டியது அதர்மம் செய்ய மட்டுமே. தர்மம் செய்ய ஒருபோதும் தயங்க வேண்டியதில்லை.
6 of 27
கை நீட்டுபவன் பிச்சைக்காரன் ஆகிறான். கை நீட்ட வைப்பவன் பிச்சைக்கு காரணம் ஆகிறான்.
7 of 27
உனக்கு சமமானவனையோ! அல்லது உன்னை விட உயர்ந்தவனையோ! மதிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை! ஆனால் உன்னை விட தாழ்ந்தவனை மதி! மறந்தும் கூட மிதித்து விடாதே!
8 of 27
தெருவில் இருப்பது எல்லாம் குப்பை இல்லை. சரியாக பட்டை தீட்டப்படாததால் குப்பையாக தெரியலாம். சரியாக பட்டை தீட்டி இருந்தால் அதுவும் தங்கமாக மின்னி இருக்கும்.
9 of 27
"கொரோனா" தொட்டாலும் தீட்டு, தொட்டு விட்டு விட்டாலும் தீட்டு, தொட்டு விட்டு தொடர்ந்தாலும் தீட்டு.
10 of 27
"மண் உனக்கு மருந்து". மண்ணை காத்து உண்டால். மண்ணை அழித்து உண்டால், "மண்ணுக்கு நீ விருந்து".
11 of 27
உன்னை ஆள்பவன் உன்னில் ஒருவனாக இருக்க வேண்டும். உன் மண்ணில் ஒருவனாக இருக்கும் வேண்டும். முக்கியமாக சுய சிந்தனை உள்ளவனாக இருக்க வேண்டும்.
12 of 27
நம் வாழ்க்கையில் இருந்து விலக்க முடியாத நண்பர்கள்: இன்பமும் துன்பமும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் கூட மூழ்கிக் கிடக்காதீர்கள், பின்னர் கரைசேர்வது கடினம் தான்.
13 of 27
கடல் நிறைய முத்துக்கள் இருந்தாலும், கரையில் நிற்பவர்க்கு அது கிடைக்காது. உடல் நிறைய வலிமை இருந்தாலும், எப்போதும் உறங்கி கிடப்பவர்க்கு அது உதவாது.
14 of 27
நீர் உயர உயர தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் தாமரை போல் இரு நண்பா. பின் துன்பமும் துயரமும் தூசி தான். சோதனையும் வேதனையும் சாதனை தான்.
15 of 27
நமக்கான நேரம் வரும் என்று காத்திருப்பதை விட, இருக்கும் நேரத்தை நமக்கான நேரமாக மாற்றிட முயல்வதே சாலச்சிறந்தது.
16 of 27
நடந்ததை நினைத்து கண்ணீர் வடிப்பதை விட, நடந்ததை கடந்து கரை சேர முயற்சி செய்வதே சிறந்தது.
17 of 27
இருந்தால் இறங்கிச் செல். இல்லை என்றால் விலகிச் செல். "அன்பு, பாசம், நேசம், மதிப்பு, மரியாதை".
18 of 27
எதிரியை நம்பு அவன் எதிரில் நின்று தான் எதிர்ப்பான். ஆனால்! நண்பனை நம்பாதே கூடவை இருந்து குழி பறிப்பான்.
19 of 27
சிலரை மறப்பது போல் நினைத்து மன்னித்துவிடு! சிலரை மன்னிப்பது போல் நடித்து மறந்து விடு...!
20 of 27
பணம் இருந்தால் மற்றவனும் உற்றவன் தான். பணம் இல்லை என்றால் உற்றவனும் மற்றவன் தான்.
21 of 27
பொறுமையை விடச் சிறந்த செல்வம் இல்லை. அமைதியை விட சிறந்த ஆபரணம் இல்லை.
22 of 27
நிறையை பேசு, நிறைய பேசாதே. குறையை பேசு, குறைத்து பேசாதே.
23 of 27
வறுமையில் செம்மையாக வாழ: காதைப் பொத்திக் கொள். வழமையில் செம்மையாக வாழ: வாயைப் பொத்திக் கொள்.
24 of 27
யார் ஒருவர் தன்னுடைய நாவை அடக்கி வைக்க வில்லையோ! அவருடைய நாவே அவரை அடங்க வைத்து விடும்!
25 of 27
மணமறிந்து மலரெடு, நிலமறிந்து பயிரிடு, தரமறிந்து பொருளெடு, தாயறிந்து பெண்ணெடு, நிலையறிந்து எட்டெடு.
26 of 27
வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தந்ததை விட, எப்படி வாழ கூடாது என்று கற்றுத்தந்தது தான் அதிகம்.
27 of 27
Thanks For Your Comment...