Type Here to Get Search Results !

வாசகர் கவிதை ஸ்டேட்டஸ் - by குல்பி

ஆயிரம் பேர் வந்து போனாலும்,
எல்லாரும் என் வழித்துணை இல்லை.
நீ மட்டுமே என் உயிர் துணை!
என் வாழ்க்கை முழுமைக்கும்!
1 of 13
Kadhal Kavithai Status

நேசிக்கும் போது குறைகள்
கண்ணுக்குத் தெரிவதில்லை.
பிரியும் போது நிறைகள்
கண்ணுக்குத் தெரிவதில்லை.
2 of 13
Brake up tamil quote

யாரும் அறியாத முகம்
அனைவருக்கும் உண்டு.
அதை யாரும் அறியாத வரை
நீயும் நானும் நல்லவர்கள் தான்.
3 of 13
Tamil dp image

இனி யாரையும் உன்னை நேசித்த
அளவு நேசிக்க முடியாது என்னால்.
ஏனெனில், இன்னொரு முறை
வலியை தாங்கும் சக்தி
என் இதையத்துக்கில்லையடி.
4 of 13
Kadhal vali Kavithai

வார்த்தையின் அர்த்தம்
அனைவருக்கும் புரியும்.
மௌனத்தின் அர்த்தம்
அன்பு கொண்ட
நெஞ்சத்துக்கு மட்டுமே புரியும்.
5 of 13
மௌனம் கவிதை

யாரையும் ஏமாற்றாமல்,
தான் உணர்ந்த வலிகளை,
பிறருக்கு கொடுக்காமல்,
மிக மிக தெளிவாக உண்மையை
மட்டும் பேசுபவனுக்கு,
இந்த உலகம் கொடுக்கும் பட்டம்
"பிழைக்க தெரியாதவன்".
6 of 13
வாழ்க்கை உண்மை ஸ்டேட்டஸ்

பிறப்பின் வலியை
அனுபவிக்க முடியவில்லை.
ஆனால், இறப்பின் வலியை
வாழும் போதே அனு அனுவாக
அனுபவிக்க முடிகிறது.
7 of 13
Vali Kavithai Image


மறந்து கூட நினைத்து விடக்கூடாது
காயப்படுத்தியவர்களை.
மறந்து கூட காயப்படுத்தி விடக்கூடாது
காயத்தை ஆற்றியவர்களை.
8 of 13
Tamil quote image

குறை சொன்னவர் யார்
என்பது இரண்டாம்பட்சம்.
அவர் சொன்ன குறை
நம்மிடம் உள்ளதா என்பது
தான் முதல்பட்சம்.
9 of 13
Manithan Kavithai Image

சாகும் வரை மகிழ்ச்சியாக இருக்க
பணத்தின் தேவையை விட,
நல்ல குணம் கொண்ட
துணையின் தேவையே அதிகம்.
10 of 13
குணம் கவிதை

நம் காதல் கைகூட வில்லை என்றாலும்,
உன் இதயத்தை வென்றவன்,
உன் இதயத்தில் சில காலம்
வாழ்ந்தவன், என்ற நிம்மதியே
எனக்கு இறுதிவரை போதுமடி.
11 of 13
Sad love quote Tamil

என் அதீத ஆசை எல்லாம்!
இதுவரை நிறைவேறாத
ஆசைகளை எண்ணி,
கடைசிவரை வருந்தாமல்
இருக்க வேண்டும் என்பதே.
12 of 13
என் ஆசை கவிதை

கோபம் என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம்.
அன்பு என்பது வாழ்க்கை.
வாழ்க்கையின் ஒரு பக்கத்துக்காக
வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்.
13 of 13
Anbu valkkai Kavithai

மேல் உள்ள கவிதத்துவங்கள் அனைத்தையும் அனுப்பியவர்: குல்பி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad