பத்து பேர் உதவியுடன் ஒருவனை அடித்து வீழ்த்துவது வீரமும் அல்ல, ராஜதந்திரமும் அல்ல. அதன் பெயர்: சூழ்ச்சி, துரோகம், கோழைத்தனம்.
1 of 30
அநியாயத்தை உலகமே சேர்ந்து நிறைவேற்றினாலும், அதில் நியாயம் கேட்டு மீண்டு எழ, ஒருவன் முளைத்து வருவான்.
2 of 30
கடவுளே உனக்கு கண் இல்லையா என்று கேட்கிறோம். அவருக்கு காது கேட்கும் என்ற நம்பிக்கையில்.
3 of 30
நல்லவர்கள் மத்தியில் தீயவர்கள் புகுந்தாலும், தீயவர்கள் மத்தியில் ஒரு நல்லவர் புகுந்தாலும், அதன் விளைவுகள் வெவ்வேறாகும்.
4 of 30
உங்களை பார்த்து விமர்சனம் செய்பவன் இயலாதவன். அவனை பார்த்து புன்னகைத்து கடந்து செல்வது தான் சிறந்தது.
5 of 30
மனிதா மண்ணை தேடு, இல்லை பொன்னை தேடு, இல்லை பெண்ணை தேடு, ஆனால், உன்னை தேட மறவாதே. நீ உன்னை தேட மறந்தால் எல்லாம் வீண்தான்.
6 of 30
நீ எவர் ஒருவருக்காக உன் நேரத்தை இழந்து, உன் உழைப்பை இழந்து உழைக்கிறாயோ, அவர் வாழ்க்கையின் ஒரு கட்டத்துக்கு மேல் உன்னை ஒரு ஆளாகக் கூட மதிப்பதில்லை.
7 of 30
வெற்றி என்பது பணத்தை சம்பாதிப்பது மட்டுமே அல்ல. மகிழ்ச்சியை தொலைக்காமல் இருப்பதுவும்.
8 of 30
பெரிய விஷயங்களை பேசுவதல்ல அனுபவம். சிறிய விஷயங்களை புரிந்து கொள்வதே அனுபவம்.
9 of 30
பாசம் என்றாலே பாயாசம் தான். ஒன்று "தனியா" விடுவாங்க, இல்ல "தவிக்க" விடுவாங்க.
10 of 30
கோபத்தில் பேசும் போது கொஞ்சம் உன்னிப்பாக கவனித்துக் கொள். அது தான் உண்மைகள் பல வரும் நேரம்.
11 of 30
என் உணர்வுகளை புரிந்து கொள்பவர்கள் தேவையில்லை. எனக்கும் உணர்வுகள் உண்டு என்று உணர்ந்து கொள்பவர்கள் போதும்.
12 of 30
கேட்டவுடன் கிடைத்த அன்பும், கேட்காமலே கிடைத்த உதவியும், எந்த காலத்திலும் எந்த காரணத்தாலும், இதய கேலரியில் இடம் பெறுவதில்லை.
13 of 30
வார்த்தைகளில் "அன்பை" செலுத்துங்கள். "அம்பை" செலுத்தாதிருங்கள்.
14 of 30
துன்பம் என்னும் கசப்பான கசாயத்தை குடம் குடமாக குடிக்க வைத்துவிட்டு. இன்பம் என்னும் தேனை தொட்டு நாக்கில் வைக்கிறது இந்த வாழ்க்கை.
15 of 30
பிடித்த வாழ்க்கையை வாழ்வதற்கும். கிடைத்த வாழ்க்கையை வாழ்வதற்கும் வித்தியாசங்கள் அதிகம்.
16 of 30
"நோயின்றி" வாழ வேண்டுமென்று நினையுங்கள்!அடுத்தவரை "நோகடித்து" வாழ வேண்டுமென்று நினைக்காதிருங்கள்!
17 of 30
இரக்கம் இல்லாதவர்களிடம் இதயத்தை கொடுத்து விட்டால், உறக்கம் இல்லா இரவுகள் பல நமதாகிவிடும்.
18 of 30
தேவைக்காக பழகும் உறவை, இரண்டு அடி தள்ளி வை. தேவை முடிந்ததும் விலகும் உறவை, இரண்டு யுகம் தள்ளி வை.
19 of 30
"அழவே மாட்டீங்களா" என்று யாரிடமும் கேட்காதீங்க. தாகம் தணிந்த பின் தண்ணீரின் தேவை குறைவு. மனம் மறுத்து போன பின் கண்ணீரின் அளவும் குறைவு.
20 of 30
சொர்கத்தின் இன்பத்தை அறிய, நரகத்தின் துன்பத்தை உணர்ந்திருக்க வேண்டும்.
21 of 30
வலி கொடுமையானது தான். அதைவிட கொடுமையானது, அந்த வலியை வெளிக்காட்ட தகுந்த சூழ்நிலை இல்லாதது.
22 of 30
யாரையும் அற்பமாய் எண்ணி விடாதே! ஒற்றை தீக்குச்சி ஒளியை உறுவாக்கி வாழவும் வைக்கும், சாகவும் வைக்கும்.
23 of 30
ஆயிரம் பேருக்கு அறிவுரை கூறும் அளவு அனுபவம் இருந்தாலும், தனக்கு என்றால் தாங்க முடிவதில்லை! யாராக இருந்தாலும்.
24 of 30
"மறதி" வியாதி என்று யார் சொன்னது? என் வாழ்க்கைக்கு மருந்தே அது தான்.
25 of 30
அதிகம் நேசித்தாலும் ஆபத்து. அதிகம் யோசிச்சாலும் ஆபத்து. இரண்டுமே ஒருத்தரை பைத்தியம் ஆக்கிடும் வல்லமை கொண்டது.
26 of 30
காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பது உண்மையோ பொய்யோ தெரியாது. நம் முயற்சி எல்லாவற்றையும் மாற்றும் என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மை.
27 of 30
வெள்ளம் வந்து சென்ற - நதி சுத்தமாகும். துன்பம் வந்து சென்ற - மனம் பக்குவப்படும்.
28 of 30
உறவுகள் ஒன்று அன்பைத் தரும் இல்லை அனுபவத்தை தரும். அன்பைத் தந்தால் பெற்றுக் கொள்வோம். அனுபவத்தை தந்தால் கற்றுக் கொள்வோம்.
29 of 30
"ராஜா" வீட்டு "ரோஜா"வாகவே இருந்தாலும், "மலர்வதும்" "மரணிப்பதும்" அந்த "ஒரு நாள்" மட்டுமே.
30 of 30
Thanks For Your Comment...