பிடல் காஸ்ட்ரோ: இவர் கியூபா புரட்சியாளர் போராளி. கியூபாவை பொதுவுடைமை நாடாக உருவாக்கியவர். சேகுவேராவுடன் நல்ல நட்பை கொண்டிருந்தார். கியூபாவின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவரை கொல்ல 600 க்கும் மேற்பட்ட முறை பலர் பல விதங்களில் முயன்றனர். ஆனால் அனைத்து கொலை முயற்சியையும் முறியடித்தார். இவர் சட்டம் பயின்றவர். சட்ட கல்லூரி மாணவராக இருந்த போது அப்போதைய கியூபா அதிபர் ராமோன் கராவ் சான் மார்ட்டின் அரசின் ஊழலுக்கு எதிராக இவர் நிகழ்த்திய உரை அப்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சரி நண்பர்களே இதோ உங்களுக்காக ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் தத்துவங்களையும் பொன்மொழிகளையும், எழுத்து மற்றும் புகைப்படம் வடிவில்.
பிறப்பு: 13 ஆகஸ்ட் 1926
இறப்பு: 25 நவம்பர் 2016
தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள். -பிடல் காஸ்ட்ரோ
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. -பிடல் காஸ்ட்ரோ
தடம் பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதித்து நடப்பவன் மாமனிதன். -பிடல் காஸ்ட்ரோ
நீ போகும் பாதையில் தடைகள் எதுவும் இல்லை என்றால் அது நீ போகும் பாதையே இல்லை. வேறு யாரோ போன பாதை. -பிடல் காஸ்ட்ரோ
கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும். -பிடல் காஸ்ட்ரோ
உன்னை அதிகம் விமர்சிப்பவனே உன்னை கண்டு அதிகம் பயப்படுகிறான். -பிடல் காஸ்ட்ரோ
தயங்குறவர்கள் கை தட்டுகிறார்கள். துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார்கள். -பிடல் காஸ்ட்ரோ
போராடும் வரை வீண் முயற்சி என்பார்கள். வென்ற பின்பு விடா முயற்சி என்பார்கள். -பிடல் காஸ்ட்ரோ
நம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும் போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ
பசியினால் திருடுகிற ஏழைகளை கைது செய்து சிறைக்கு அனுப்புகிறார்கள். ஆனால் அரசிடமிருந்து கோடி கணக்காக திருடுவார்கள் ஒருநாள் கூட சிறைத்தண்டனை அனுபவித்ததில்லை. -பிடல் காஸ்ட்ரோ
நீங்கள் என்னை தண்டியுங்கள், சிறையில் அடையுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில் வரலாறு எனக்கு நீதி வழங்கும். -பிடல் காஸ்ட்ரோ
நான் என்னை வேலைக்கு அர்ப்பணித்து விட்டேன். நான் அதன் அடிமை. நான் பார்க்க நினைக்கிற, செய்ய நினைக்கிற பணிகளை பிறருக்கு தருவதில்லை, எனக்கு வேலை செய்ய பிடிக்கும். காலம் முழுவதும் நான் அப்படி இருக்கவே விரும்புகிறேன். -பிடல் காஸ்ட்ரோ
கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான மரண போராட்டம் தான் "புரட்சி". -பிடல் காஸ்ட்ரோ
புரட்சி என்பது ஆண்கள் சார்ந்தது மட்டுமல்ல. பெண்களும் புரட்சியில் பங்கு பெறுவதே உண்மையான புரட்சி. -பிடல் காஸ்ட்ரோ
ஒரு புரட்சியாளன் என்பவன் தனது இலட்சியத்தை ஒளிவு மறைவின்றி தனது பகைவர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். -பிடல் காஸ்ட்ரோ
Thanks For Your Comment...