தன்னலம் சிறிதும் இன்றி மக்கள் பணியே மகத்தான பணி என்று பொற்கால ஆட்சி தந்து பொதுநலத்துடன் செயல்பட்ட, கல்வி கண் திறந்த கர்மவீரர், படிக்காத மேதை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பொன்மொழிகள்.
பிறப்பு - 15 ஜுலை 1903
இறப்பு - 2 அக்டோபர் 1975
எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை!
நேரம் தவறாமை எனும் கருவியை பயன்படுத்துபவன் எப்போதும் கதாநாயகன் தான்!
பணம் இருந்தால் தான் நாலு பேர் நம்மை மதிப்பார்கள் என்றால், அந்த மானங்கெட்ட மதிப்பு எனக்கு தேவையே இல்லை!
நூறு சிறந்த அறிவாளிகளுடன் போட்டி போடுவதை விட, ஒரு முட்டாளோடு போட்டி போடுவது மிக கடினமானது!
பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும்.
உன் பிள்ளை ஊனமாய்ப் பிறந்தால் மட்டுமே சொத்து சேர்த்துவை. இல்லையென்றால் சொத்து சேர்த்து வைத்து பிள்ளையை ஊனமாக்காதே!
அளவுக்கு அதிகமாக பேசுவது எவ்வளவு தீமையான வழக்கமாக இருக்கிறதோ, அதே போல் குறைவாக பேசுவதும் தீமையே!
கலப்பு மணம், சமபந்தி உணவு இவைகளால் சாதி அழியாது. மனிதனின் மனம் புரட்சிகரமான மறுதலைப் பெற்றால்தான் சாதி ஒழியும்.
ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும்!
கற்ற ஜாதி, கற்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!
அப்பாவி ஏழை மக்களை வசதி கொண்டவர்களும், கல்மனம் கொண்டவர்களும், கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது மிக அவசியம்.
நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போகாமல் நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது.
சட்டமும், விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதி முறைகளுக்காகவும் மக்கள் இல்லை.
எல்லாம் போய்விட்டாலும், வெல்ல முடியாத உள்ளம் இருந்தால், உலகத்தையே கைப்பற்றலாம்!
துன்பத்தை அனுபவிக்காமல், எந்த ஒரு மனிதனும், அவரது இலட்சியத்தை அடைய முடியாது!
Thanks For Your Comment...