உலகப்புகழ் பெற்ற தொழிலதிபர் பில்கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தனது தொண்டு நிறுவனம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல நற்காரியங்களை செய்து வருபவர் பில்கேட்ஸ். இவர் அக்டோபர் 28, 1955 ல் அமேரிக்காவில் பிறந்தவர்.
நண்பர்களே பில்கேட்ஸ் அவர்களின் 21 சிறந்த சிந்தனைகளை உங்களுக்காக எழுத்து வடிவிலும் புகைப்படம் வடிவிலும் பகிர்ந்து கொள்கிறேன்.
நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பிறர் தெரிந்து கொள்ள பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஏழையாக பிறந்தால், அது உங்கள் தவறு அல்ல, ஆனால், நீங்கள் ஏழையாக இறந்தால், அது உங்கள் தவறு தான். - பில்கேட்ஸ்
இந்த உலகில் யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், அது உங்களை நீங்களே அவமானப் படுத்துவதற்கு சமம். - பில்கேட்ஸ்
உங்களால் நம்பிக்கையுடன் கனவுகாண முடியும் என்றால், கனவில் கண்டதை நிஜத்திலும் செயல் படுத்தி செய்து முடிக்க முடியும். - பில்கேட்ஸ்
வெற்றி ஒரு மோசமான ஆசிரியர், அது புத்திசாலிகளையும் மயக்கி தோல்வியே நமக்கு இல்லை என்று எண்ண வைத்துவிடும். - பில்கேட்ஸ்
எல்லோரும் நினைப்பதுபோல் நான் வெற்றியாளன் அல்ல. இப்போதும் வெற்றியடையும் முயற்சியில் தான் இருக்கிறேன். - பில்கேட்ஸ்
பெரிய வெற்றி வேண்டும் என்றால், நீங்கள் சில நேரங்களில் பெரிய அபாயங்களை எதிர் கொள்ள துணிய வேண்டும். - பில்கேட்ஸ்
கடினமான வேலைகளுக்கு சோம்பேறியான ஆட்களையே தேர்வு செய்கிறேன். ஏனென்றால் அந்த வேலையை செய்து முடிக்க அவர்களால் தான் சுலபமான வழியை கண்டுபிடிக்க முடியும். - பில்கேட்ஸ்
தொழில்நுட்பம் ஒரு சாதாரண கருவி. குழந்தைகளை ஊக்குவித்து, ஒன்றினைந்து செயல்பட வைப்பதில், ஆசிரியர் மிக முக்கியமானவர். - பில்கேட்ஸ்
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கிறது. ஆனால் அனுபவமோ தவறான முடிவிலிருந்தே கிடைக்கிறது. - பில்கேட்ஸ்
நான் எனது கல்லூரியில் முதலிடம் பெறவில்லை ஆனால், முதலிடம் பெற்ற அனைவரும், எனது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை செய்கின்றன. - பில்கேட்ஸ்
வெற்றியை கொண்டாடுவது நல்லது தான். ஆனால், தோல்வியின் பாடங்களை மறக்காமல் இருப்பது மிகவும் நல்லது. - பில்கேட்ஸ்
வலிமையாக இருந்தாலும் என்னுடைய மோசமான செயல் திட்டங்கள் எனக்கு தோல்விகளை வழங்கியிருக்கின்றன. - பில்கேட்ஸ்
வறுமையில் இருப்பவர்களை என் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கிறேன், அவர்களின் வறுமையை அல்ல. - பில்கேட்ஸ்
என் அடுத்த முதலீடு எதில் என்பதை என் வாடிக்கையாளர்களே தீர்மானிக்கிறார்கள். - பில்கேட்ஸ்
மகிழ்ச்சியற்ற வாடிக்கையாளர்களே, என் நிறுவனத்தின் அடுத்த கட்ட ஆரம்பமாக இருக்கிறார்கள். - பில்கேட்ஸ்
திட்டமிட்ட செயலை சிறப்பாக செய்ய முடியவில்லை என்றாலும் கூட, குறைந்த பட்சம் செய்து முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். - பில்கேட்ஸ்
கற்றுக்கொடுப்பதனால் தோல்விகளே என் மனதுக்கு நெருக்கமானவை. - பில்கேட்ஸ்
கழிவறையை சுத்தம் செய்ய வேண்டுமென்றாலும் கூட, அதற்கும் நூறு சதவிகித உழைப்பைக் கொடுப்பேன். - பில்கேட்ஸ்
நம் நடத்தை மாற்றுவதற்கு, நாம் நிறைய பணம் செலுத்த வேண்டி உள்ளது. - பில்கேட்ஸ்
பிரச்சினைகள் இருக்கும் இடத்திலேயே அதற்கான தீர்வுகளையும் தேடுகிறேன். - பில்கேட்ஸ்
ஒரு குறிப்பிட்ட புள்ளியை தாண்டி பணம் எனக்கு எந்த பயனும் தரவில்லை. - பில்கேட்ஸ்
நீங்கள் கற்றதை பிறர் கற்றுக்கொள்ள பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பகிர்வு எங்கள் அடுத்தடுத்த பதிவுகளை சிறந்ததாக மாற்றும்.
எங்கள் யூடியூப் சேனல் லிங் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள், பிடித்திருந்தால் சப்ஸ்கிறைப் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
🙏நன்றிகள்🙏
Thanks For Your Comment...