வாழ்க்கை உன்னை எத்தனை முறை, எத்தனை வழிகளில் சோதித்தாலும், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள் நண்பா. நீ படும் கஷ்டங்கள் உன்னை சிறந்த மனிதனாக மாற்றும் என்பதை.
வாழ்க்கை உன்னை பலவிதங்களில் பலவாறு சோதிக்கும். நம்பிக்கை இழந்து வாழ்க்கையை வெறுத்து விடாதே. உன் சிந்தனையும் செயலும் உன் இலக்கை நோக்கியே இருக்கட்டும். வெற்றி வந்தே தீரும்! வென்றே தீருவாய்!
எந்த சூழ்நிலையிலும் நமக்கு யாரும் இல்லை என்று எண்ணி செயல்படுவதை நிறுத்தி விடாதே. தொடர்ந்து செயல்படு. உன் வெற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும், உன்னை விரும்பி பார்க்க வைக்கும்.
வெற்றியோ தோல்வியோ, இறுதி வரை முயற்சி செய். உயர்வோ, தாழ்வோ, இன்பமோ, துன்பமோ, இறுதி வரை வாழ்ந்து பார்.
சில வலிகள் ஆறுதல் கண்டதும் ஆறிவிடும். சில வலிகள் மாறுதல் வந்ததும் மாறிவிடும். சில வலிகள் காலம் காரைத்து விடும். So, எந்த வலியும் நம்மை ஒன்றும் செய்யாது. காலம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்.
அனுபவங்களை சேகரித்து கொள். உனக்கு நீயே வழிகாட்டியாக இரு. ஒருபோதும் உற்சாகம் குறையாது. தவறான பாதைக்கு வழிகள் சென்றாலும், கால்கள் தவறான பாதைக்கு செல்லாது.
சாதாரண மனிதனை கூட அசாதாரண மனிதன் ஆக்குவது அவன் எதிர்கொள்ளும் சோதனைகள் தான். சோதனைகள் வந்தால் சோர்ந்து போகாதே. துணிவுடன் எதிர்கொள். நாளை அவை உனக்கு சாதனைகள் ஆகும்.
எந்த பிரச்சனை வந்தாலும் "கடவுளே பார்த்துக் கொள்ளும்" என்று கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு, நாம் நம் கடமையை செய்தால், துன்பம், துக்கம், துயரம், எல்லாம் நம்மை ஒன்றும் செய்யாது.
கவலைகள் வந்து கலங்கச் செய்தால், கடவுளின் கை பிடித்து நடக்க தொடங்கு. அவர் கவலைகளை கடக்க உதவுவார். அவர் ஒருவரே நமக்கு ஆறுதலும் மாறுதலும் தர வல்லவர்.
உனக்கான உயரத்தை நீ தொடும் வரை உன்னை பற்றி வரும் விமர்சனங்கள், உனக்கு எதிராகத் தான் இருக்கும். வருந்தினால், வருந்தி கொண்டே தான் இருக்க வேண்டும். ஏறி மிதித்து எழுந்து வா தோழா!
Thanks For Your Comment...