இந்த உலகத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம், முகம் தெரியாத யாரோ ஒருவருக்கு நாம் உதவி 🤝செய்வதுதான்🤝.
தின நாள் காட்டியில் எந்த ராசிக்கு மகிழ்ச்சி என்று எழுதப்பட்டு இருக்கிறதோ, அந்த ராசி தான் நம் ராசி என்று எண்ணிக் கொண்டால், வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் தான்.
வாழ்க்கையின் தேடலில், தொலைத்து விடக் கூடாத மிகப்பெரிய பொக்கிஷம்: சந்தோஷம்!
சந்தோஷம் என்பது ரோட்ல கிடக்குற காசு மாதிரி. எடுத்தவன் என்ஜாய் பண்றான். தொலைத்தவன் பீல் பண்றான். டேக் இட் ஈசி! லைஃப் இஸ் ஈசி!
தேவை இல்லாத எண்ணங்களில் இருந்து, தன்னை தானே காத்துக் கொள்பவனுக்கு மட்டுமே மகிழ்ச்சி எப்போதும் சொந்தம்.
அடுத்த வேளை உணவு எங்கு எனத் தெரியாத உயிரினங்கள் இவ்வுலகில் மகிழ்ச்சியாக சுற்றி வருகின்றன. உணவுக்கு உத்தரவாதம் இருந்தும், உனக்கு ஏன் கவலை! ஏன் கலக்கம்!
ஒப்பிடும் போது, வெற்றியும் வரும், தோல்வியும் வரும். ஆனால், ஒப்பிடா போது தான், நிம்மதியும், மகிழ்ச்சியும் வரும்.
மகிழ்ச்சியாய் இருப்பது "சாதாரணம்" தான். மகிழ்ச்சியாய் இருப்பது போல் நடிப்பது சதா"ரணம்" தான்.
துன்பம் உதித்தால், கவலைபட வேண்டும் என்றோ, அழ வேண்டும் என்றோ அவசியம் இல்லை. துன்பம் வரும் போது சிரி. சிரிக்க முடியாது தான் ஆனாலும் சிரி. சிரித்தால் துன்பம் உதிரும்! இன்பம் உதிக்கும்!
உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியான விஷயம்: புன்னகை. அதைவிட மகிழ்ச்சியான விஷயம்: அந்த புன்னகைக்கு காரணம் நாம் என்பது.
அள்ள முடியாத அளவு சின்ன சின்ன சந்தோஷங்கள் குவிந்து கிடக்க, சிதறிக்கிடக்கும் சோகங்களை மட்டும் பொறுக்குவது ஏனோ? மகிழ்ச்சி இல்லை என்றால் கூட, மகிழ்ச்சியாக இருப்பது போல் கற்பனையாவது செய்து கொள். அந்த கற்பனை கொடுக்கும் மகிழ்ச்சியை.
நிலை மாறினால் மகிழ்ச்சி வராது. மகிழ்ச்சியாக இருந்தால், நிலை தன்னால் மாறும்.
நம் சந்தோஷம் என்பதை, நாம் அடுத்தவரிடம் அடமானம் வைக்காத வரை, அது நம் உள்ளங்கையில் உள்ள ஆக சிறந்த பொக்கிஷமே.
சிலரோடு ஒப்பிட்டு பார்த்தால், நாம் வென்றிருப்போம். சிலரோடு ஒப்பிட்டு பார்த்தால், நாம் தோற்றிருப்போம். யாருடனும் ஒப்பிடாத வாழ்வில், நாம் கண்டிப்பாக மகிழ்ந்திருப்போம்.
போதும் என்ற ஒற்றை வார்த்தையில் தான், உண்மையான நிம்மதியும், முழுமையான சந்தோஷமும், மறைந்திருக்கிறது.
Thanks For Your Comment...