Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 97 மானம் ஸ்டேட்டஸ்

குறள் 961: இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். கலைஞர் உரை: கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.

Thirukkural 961

Thirukkural Kaalai Vanakkam


குறள் 962: சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். கலைஞர் உரை: புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்.

Thirukkural 962

Thirukkural Kaalai Vanakkam


குறள் 963: பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. கலைஞர் உரை: உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.

Thirukkural 963

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 964: தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. கலைஞர் உரை: மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.

Thirukkural 964

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 965: குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். சாலமன் பாப்பையா உரை: நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.

Thirukkural 965

Thirukkural Kaalai Vanakkam


குறள் 966: புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற் றிகழ்வார்பின் சென்று நிலை. சாலமன் பாப்பையா உரை: உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?

Thirukkural 966

Thirukkural Kaalai Vanakkam


குறள் 967: ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. சாலமன் பாப்பையா உரை: இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.

Thirukkural 967

Thirukkural Kaalai Vanakkam


குறள் 968: மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து. சாலமன் பாப்பையா உரை: குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?

Thirukkural 968

Thirukkural Kaalai Vanakkam


குறள் 969: மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். மு.வ உரை: தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

Thirukkural 969

Thirukkural Kaalai Vanakkam


குறள் 970: இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழு தேத்தும் உலகு. மு.வ உரை: தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

Thirukkural 970

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad