இந்த உலகில், சொல்ல முடியாத கணக்கும் இல்லை. திறக்க முடியாத பூட்டும் இல்லை. அவிழ்க்க முடியாத முடிச்சும் இல்லை. வெல்ல முடியாத இலக்கும் இல்லை.
தன் மதிப்பை அறிந்தவன், யார் காலிலும் விழ மாட்டான். காலத்தின் மதிப்பை அறிந்தவன், யார் தயவிலும் வாழ மாட்டான்.
உடலில் காயம் என்றால் மருந்திடுங்கள். மனதில் காயம் என்றால் மறந்திடுங்கள்.
வாள் கூர்மையாக இருப்பது சிறப்பு, ஆனால் அது கோழையிடம் இருப்பது சிரிப்பு.
ஆகாதவன் ஏங்குறான், ஆனவன் புலம்புறான், "திருமணம்".
பார்க்காமல் விழுந்தால், அது பள்ளம்! பார்த்ததும் விழுந்தால், அது தான் நம் உள்ளம்...!
"இதுவும் கடந்து போகும்". சொல் எளிது! செயல் கடினம்!
தட்டிக் கொடு தடுமாறும் போது. தட்டிக் கேள் தடம் மாறும் போது.
சிக்கல் என்றாலும் சரி, சிக்னல் என்றாலும் சரி, சிறிது நேரம் காத்திருந்தால், வழி தானாக பிறக்கும்.
சோறு பொங்கும் போது, வாயை திறக்கனும், தீயை குறைக்கனும். கோபம் பொங்கும் போது, வாயை மூடனும், மனதை அடக்கனும்.
இதயம் சுட்டவரை, இமைக்கும் முன் மறந்திடு. இதயம் தொட்ட வரை, இறக்கும் வரை மறக்காதிரு.
தன்மானம், சுயமரியாதை, என்று வாழ்ந்தால், மனசு நிறைந்திருக்கும், பர்ஸ் காலியா இருக்கும்.
"ஏத்தி" விட்டு "வீழ்ச்சியில்" "குளிச்சி" காணாதே, "ஏற்றி" விட்டு "எழுச்சியில்" "மகிழ்ச்சி" கொள்.
நம் வலி சிரிப்பாக இருக்கலாம், ஆனால், நம் சிரிப்பு வலியாகி விடக்கூடாது.
அதித அறிவியல் வளர்ச்சி, அறிவின் எழுச்சி, ஆனால் அது, உலக அழிவின் நீட்ச்சி.
தவறு செய்யாத மனிதன் இல்லை. அந்த தவறை உணர்ந்து திருந்தாதவன் மனிதனே இல்லை.
நாம் சரியாக இருந்தால், கோபப்படுவதற்கு அவசியமில்லை! நாம் தவறாக இருந்தால், கோபப்படுவதில் அர்த்தமேயில்லை!
கேட்டு திருந்தும் மனிதனாக இரு. பட்டு திருந்தும் மனிதனாக இராதே.
அறியாதது தேடி அறிவதே அறிவு. தெரியாதது தேடி தெளிவதே தெளிவு.
இந்த வாழ்க்கை மிகச் சரியாக காட்டிக் கொடுத்து விடும். விழும் போது நண்பனையும்! எழும் போது துரோகியையும்!
Thanks For Your Comment...