அவமானம், துரோகம் எதுவானாலும், நிகழ்ந்த பின், நிமிர்ந்து வந்து, காரணமானவன் வாய் பிழந்து வியக்கும் வண்ணம், சிறப்பாக வாழ்ந்து காட்டுவதே வாழ்க்கை.
1 of 20
வாழ்க்கை கவிதைகள் ஸ்டேட்டஸ்
தொடங்குவதில் மட்டும் அல்ல வாழ்க்கை, தொடங்கியது தொடர்வதில் தான் இருக்கிறது உண்மையான வாழ்க்கை.
2 of 20
வாழ்க்கையில் வென்றவர்களை எல்லாம் திறமையானவர்கள் அல்ல! ஆனால் அவர்கள் அனைவரும், சரியான நேரம், சரியான வாய்ப்பை, மிகச் சரியாக பயன்படுத்தி கொண்டவர்கள்.
3 of 20
நாளைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவது, இன்றைய எண்ணங்களும் செயல்களும் தான்.
4 of 20
வாழ்க்கையில் பல வாய்ப்புகள் வரும். ஆனால், அதில் ஒரு சில வாய்ப்புகளே வாழ்க்கையை தரும்.
5 of 20
வாழ்க்கைக்கு எல்லை அமைத்தால் தவறில்லை, எல்லைக்குள் வாழ்க்கையை அமைத்தால், அது நிச்சயம் தவறு தான். உலகம் பெரிது! வாழ்க்கை அறிது! வாழ்வது மிக இனிது!
6 of 20
பென்சில் எழுதிய பிரச்சனைக்கு தீர்வு பென்சிலின் பின்புறமே உள்ளது. நம்மால் எழுந்த பிரச்சனைக்கு தீர்வு நம்மிடமே உள்ளது. மாற்றி போ! மறந்து போ! இல்லை கடந்து போ!
7 of 20
உழைத்து களைத்தவன் உறக்கம் சாலை வனத்தில். ஊழல் செய்து பெருத்தவன் வாழ்க்கை சோலை வனத்தில்.
8 of 20
மரணம் வரை மறக்காமல் இருக்க வேண்டிய ஒரு விஷயம். "மனித மனம் ஒரு குரங்கு". அது எப்போது வேண்டுமானாலும், எந்த பக்கம் வேண்டுமானாலும், பணத்தை பொருத்தோ இல்லை சூழ்நிலையை பொருத்தோ சாயலாம்.
9 of 20
வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் தீர்வு ஒன்று தான்: அது தான் ☛ மன"திடம்".
10 of 20
தேவை எனில் தேடி ஓடுவதும், தேவை முடிந்ததும் விட்டு விலகி ஓடுவதும் இந்த உலகத்தின் இயல்பு.
11 of 20
தவறென்று உணர்ந்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே! மன்னிப்பு கேட்பது தவறில்லை! மன்னிப்பு கொடுக்க மறுப்பதே தவறு!
12 of 20
ஒருவரை நம்பி ஒருவரை பகைக்காதே, இறுதியில் அவர்கள் இருவர் ஒரு மரம் ஆவர், நீ தனி மரம் ஆவாய்.
13 of 20
நெருப்பு இருக்கும் வரை இருள் மிளிரும். சிரிப்பு இருக்கும் வரை வாழ்க்கை ஒளிரும்.
14 of 20
எதிர்பார்த்து வரும் இன்பங்களை விட, எதிர்பாராது வரும் துன்பங்களே, எதிர்கொண்டு வாழும் திறனை முழுமையாக கற்றுத்தரும்.
15 of 20
மிக கடினமான சூழ்நிலையில், சிறு வார்த்தை கூட, பெரும் ஆறுதல் தந்து, மிகப்பெரிய மாறுதல் தரவல்லது.
16 of 20
பக்குவப்பட்ட மனமும், மரத்து கனத்துப்போன மனமும், எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை!
17 of 20
முடிந்தவரை நம்பிக்கையை விதைத்து கொண்டே இரு. முடிந்தவன் எழுந்து விடட்டும். முடியாதவன் மடிந்து விடட்டும்.
18 of 20
அச்சத்துடன் அமைதி காத்து, ஆயுளை இழப்பதை விட, துணிந்து போராடி மடிவதே மேல்.
19 of 20
கடந்த காலத்தில் நிகழ்ந்ததை எண்ணி ரசிப்பவன் மேதாவி. கடந்த காலத்தில் நிகழ்ந்ததை எண்ணி ஏங்குபவன் ஏமாளி.
20 of 20
Thanks For Your Comment...