Explore our latest and largest collection of Untruth Quotes In Tamil, துரோகம் பற்றிய கவிதைகள், துரோகம் ஸ்டேட்டஸ், Throgam Kavithai Status, Drogam Kavithai Image, துரோகம் பற்றிய சிந்தனைகள்
Throgam Kavithai Status
இரண்டரை மணி நேர படத்துக்கே வில்லன் தேவைப்படும் போது, நம் நீண்ட நெடிய வாழ்க்கைக்கு, எதிரியும், துரோகியும் அவசியம் தானே!
1 of 15
முன்னால் பொய் பேசுவதும், பின்னால் மெய் பேசுவதும், உண்மையில் பச்சை துரோகம்.
2 of 15
ஏமாற்றத்தை விட துரோகம் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தத் தான் செய்கிறது. இவர்களால் எப்படி இவ்வளவு காலம் தொடர்ந்து தெரியா வண்ணம், அறியா வண்ணம் நடிக்க முடிந்தது என்று.
3 of 15
கூடவே உக்காந்து "குழி பறிப்பது" அந்த காலம். "குழி பறித்த" பின் கூட வந்து உக்காருவது இந்த காலம். - அல்ஃபியோ
4 of 15
சில பல கஷ்ட நஷ்டங்களை சந்தித்து, துரோகத்தின் வலியை முழுவதும் உணர்ந்தபின் தான், நம் நடத்தை மாறி, செயல் புது வடிவம் பெறுகிறது. -likemystatus
5 of 15
நீ தான் உலகம் என்று நம்பி வாழும் உறவை ஏமாற்றுவது, ஆயிரம் முறை புறமுதுகில் குத்துவதற்கு சமம்.
6 of 15
ஏமாந்தது வருத்தம் தரவில்லை. ஆனால், உண்டு, குடித்து, உறங்கி, கூடவே இருந்த போது அடையாளம் காண தவறி விட்டேன் என்பது தான் மிக மிக வருத்தம் தருகிறது.
7 of 15
துரோகம் கொலைக்கு சமம்! தெரியாமல் கூட துரோகத்தை யாருக்கும் பரிசளித்து விடாதீர்கள்! சிலர் துணிந்து வென்று விடுவர்! சிலர் துவண்டு முடங்கி விடுவர்! - அல்ஃபியோ
8 of 15
பாசம் என்று பாசாங்கு செய்யும் உறவு, பணம் இன்றி, புகழ் இழந்து, மதிப்பு மங்குகையில் மறையும்.
9 of 15
துரோகி சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்க, இப்படியும் பேசுவான், அப்படியும் பேசுவான். அதை வலி என்று எண்ணினால் வீழ்ந்து விடுவாய். அனுபவம் என்று எண்ணினால் ஜெயித்து விடுவாய். -likemystatus
10 of 15
பாசமானவனுக்கு மோசம் செய்பவன், தன்னைவிட மோசமானவனிடம் நாசமாவான். கர்மா அதிக சக்தி வாய்ந்தது! - சிந்துஜா
11 of 15
ஒருவன் தேவைக்கு அதிகம் பணிகிறான் என்றால், விழித்துக் கொள் நண்பா! துரோகியும் முதலில் அதையே தான் செய்வான்! - அல்ஃபியோ
12 of 15
எக்காலத்திலும், எக்காரணத்தாலும், மறந்தும் துரோகத்தை மட்டும் விதைத்து விடாதே நண்பா. ஏனெனில், விதைப்பதுதான் அறுவடை ஆகும்! -likemystatus
13 of 15
உன்னால் ஏமாற்ற பட்டவனை ஏமாளி என்று எண்ணாதே! நீ ஏமாற்றியது அவனை அல்ல! அவன் உன்மேல் வைத்த ஆகபெறும் நம்பிக்கையை!
14 of 15
துரோகத்தால் தொலைந்த புன்னகையை, அன்பால் மீட்டெடுக்க முடிந்தால், அந்த அன்பு வாழ்கையின் வரம்.
15 of 15
Thanks For Your Comment...