உலகம் அள்ளி எறிந்த வார்த்தைகள் எல்லாம் கல்லாக என்னில். கல் கொடுத்த வலிகளோ இங்கு வரிகளாக விரிகிறது. நல்லவேளை வலிகள் வரிகள் ஆகியது, இல்லை உயிரையே குடித்திருக்கும்.
1 of 15
மகிழ்ச்சி என்பது ஒரு நொடிக்கதை. நிம்மதி என்பது ஒரு வரிக்கதை. ஏமாற்றம் என்பது சிறுகதை. போராட்டம் என்பது தொடர்கதை. இது தான் என் வாழ்க்கை கதை.
2 of 15
இடர் தீரும் என்று இடம் பெயர்ந்தாலும் கூட, தொடர்வண்டியாய் தொடர்கிறது துயரம்!
3 of 15
கனவுகள் தரும் ஏக்கத்தை சுமந்து, நினைவுகள் தரும் தாக்கத்தை தாங்கி, வாழ்க்கை தடுமாறி, தடம் மாறி, விடையை தேடி பயணிக்கிறது.
4 of 15
இனிப்பு இருக்கும் வரை ஈக்கள் மொய்ப்பது இயற்கை. ஆனால், இனிப்பு தீர்ந்ததும் மொய்த்த ஈக்களே எள்ளி நகைப்பது வேதனையின் உச்சம்.
5 of 15
கலைத்திட முடியா, மறந்திடா கவலைகள் கட்டி அணைக்கும் போதெல்லாம், தூங்கிட முடியா இரவுகளின் நீளம் நீள்கிறது!
6 of 15
இதயம், தொண்டை அடைக்கும் துக்கத்தையும் தாங்கி, அடுத்தவர் முன் உதடுகளை சிரிக்க வைக்கிறது. ஆனால், இந்த கண்கள், கலங்கி காட்டி கொடுத்து விடுகிறது.
7 of 15
இந்த வாழ்க்கை துன்பத்தையும், சோதனையையும், வேதனையையும், மீண்டும் மீண்டும் கொடுத்து, எது வந்தாலும் எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போல் ஆடாமல், அசையாமல் நிற்க்க கற்றுக் கொடுத்து விட்டது.
8 of 15
வெற்றியையும் மகிழ்ச்சியையும் புன்னகையையும் சுமந்து பயணிக்கும் போது உடன் பயணிக்க உறவுகள் பல இருக்கும். தோல்வியையும் வேதனையையும் சுமந்து பயணிக்கும் போது உறவுகள் ஒன்று கூட இருப்பதில்லை.
9 of 15
நம்மை அழ வைத்தவர்களும், நமக்காக அழுதவர்களும், மரணம் வரை நம் நினைவை விட்டு நீங்குவதில்லை.
10 of 15
நம்பிய அனைத்தும் நம்பிக்கை துரோகம் செய்தது ஏனோ! மனதாலும் தவறிழைக்காமல் மனது வதைபடுவது ஏனோ! பணம் இல்லாமல் சொந்தம் கூட பகை என்று எண்ணுவது ஏனோ! பணம் இல்லாமல் படைத்தவன் பர்வையும் படாமல் போனதோ! இறுதியில் சோகம் மட்டுமே என் சொந்தமாகிப் போகுமோ!
11 of 15
வாழ்ந்து முடித்து வரும் மரண வலி இயற்கை! ஆனால், இத்தனை காலம் இந்த போலி அன்பிற்கு உண்மையாக இருந்தோம்! என்பதை உணரும் போது வரும் மரண வலி மிக கொடியது!
12 of 15
சிந்தும் கண்ணீரை துடைக்க ஒற்றை கரம் கூட இல்லை. கவலையில் தேற்றிட கயவனும் இல்லை. ஆனால், அறியாமல் செய்த செயலை குற்றம் என்று விமர்சிக்க உலகமே வருகிறது.
13 of 15
கடந்த கால கடினமான நினைவுகள், மரணம் வரை மரணிக்காமல் வலி தரும் ரணமான சுவடுகள்.
14 of 15
இந்த காசு பணம் கொடுக்கும் மதிப்பையும், மரியாதையையும், எந்த நல் நடத்தையும், நல் குணமும் கொடுப்பதில்லை.
15 of 15
Thanks For Your Comment...