எல்லா நேரங்களிலும் மனம் விட்டு பேசுவதற்கும், அன்பு காட்டுவதற்கும், ஓர் உறவு கிடைத்து விட்டால், வாழும் வாழ்க்கை சொர்க்கம் தான்.
1 of 15
உங்கள் மனைவியை அடுத்தவரிடம் அறிமுகப்படுத்தும் பொழுது, 'She is my wife!" ன்னு சொல்றதுக்கு பதிலாய், "She is my life!" ன்னு சொல்லுங்கள். வாழ்க்கை சந்தோசமாய் நகரும்!
2 of 15
புரிந்து நடக்க ஒரு துணையிருந்தால், சரிந்து விழாமல் வாழ்ந்திடலாம்! வாழ்க்கை முழுவதும்!
3 of 15
அழகான அறிவார்ந்த பெண் மனைவியாக அமைவது அதிர்ஷ்டம் மட்டுமே! அமைந்த மனைவியை ஆயுள் வரை கண் கலங்காமல். அழகாக வைத்திருப்பதே ஆண்மை!
4 of 15
கடந்த காலத்தை மறக்கடிக்கும் அளவுக்கு அன்பு செய்யும் துணை கிடைப்பது வாழ்வின் வரம்.
5 of 15
நீயா நானா என்பதல்ல! நீயும் நானும் என்பதே! 🤵இல்வாழ்க்கை👸
6 of 15
குடும்பம் என்பது குருவி கூடு. பிரிப்பது எளிது, இணைப்பது கடினம்.
7 of 15
"உனக்காக எதையும் இழப்பேன்" என்று சொல்லும் உறவை விட, "நீ எதை இழந்தாலும் உன்னுடன் நான் இருப்பேன்" என்று சொல்லும் உறவே சிறந்த வரம்.
8 of 15
சில உறவுகள் உடன் இருந்தாலே போதும்! மனசுக்கு சந்தோஷமாகவும்! நமக்கு தெம்பாகவும் இருக்கும்!
9 of 15
மிகப்பெரிய சொத்து எதுவென்றால்: எந்த பிரச்சினையாக இருந்தாலும் "கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும்" என்று சொல்லும் ஒரு உறவு தான்.
10 of 15
ஆசையை பகிரவோ இல்லை அன்பை பொழியவோ! ஆறுதலுக்காகவோ இல்லை அணைத்து உறங்கவோ! புரிந்து கொண்ட புனிதமான ஓர் உறவு தேவை அனைவருக்கும்!
11 of 15
நீ யாருக்காக வாழ்கிறாயோ அவர்களுக்காக பலமுறை விட்டு கொடு. உனக்காக யார் வாழ்கிறார்களோ அவர்களை ஒருமுறை கூட விட்டு கொடுக்காதே.
12 of 15
பணமும் புகழும் மரத்தின் கனிகள்! நட்பும் உறவும் வேர்கள்! கனிகள் இன்றி வாழ இயலும்! வேர்கள் இன்றி வாழ இயலாது!
13 of 15
வாழ்க்கை என்ற புத்தகத்தில் சில உறவுகள் பாடம் படித்து, கிழித்து, கசக்கி எறிய வேண்டியவை! சில உறவுகள் படித்து, பிடித்து, பக்குவப்படுத்தி, பத்திரப்படுத்தி, மடித்து வைக்க வேண்டியவை!
14 of 15
நீ காட்டும் அன்பு உலகை மாற்றிடாது. ஆனால் நீ விரும்பும் உறவுக்கு உன்னை உலகமாக மாற்றிடும்.
15 of 15
Thanks For Your Comment...