அரசியல் என்பது மக்கள் சேவை. அரசியல்வாதி என்பவன், மக்கள் சேவைக்கு மனமுவந்து தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் அற்புதமானவன். -லைக்மைஸ்டேட்டஸ்
நண்பா நீ அரசியல்வாதியா இரு, இல்லை அரசு அதிகாரியா இரு. உனக்கு ஊதியம் அரசு கொடுக்கலாம், அரசுக்கு ஊதியம் மக்கள் கொடுப்பது தான். நீ பணம் வாங்கி வேலை செய்யும் வேலைக் காரன் இல்லை. மக்கள் பணத்தை வாங்கி, மக்களுக்கு சேவை செய்யும் மக்களில் ஒருவனான சேவைக்காரன். - அல்ஃபியோ
எல்லையில் தன் நாட்டை காக்க, தன்னை அர்பணிப்பவன் வீரன். *அவன் மதிக்கப்பட வேண்டும்.* நாட்டில் தன் மக்களை காக்க, தன்னை அர்பணிப்பவன் அரசியல்வாதி. *தவறினால் இவன் மிதிக்கப்பட வேண்டும்.* - அல்ஃபியோ
ஆன்மீகமும் அரசியலும் ஒன்று தான். ஆன்மீகம் என்பது கடவுளை விரும்பி, அவருக்காக தன்னை அர்பணித்து, மக்களுக்கு செய்யும் சேவை. அரசியல் என்பது கடவுள் படைத்த மக்களை விரும்பி, அவர்களுக்காக தன்னை அர்ப்பணித்து, கடவுளுக்கு செய்யும் சேவை.
அரசியல் என்பது: தனக்கான வாழ்வாதாரத்தை தேடும் பணி அல்ல, மக்களுக்கான வாழ்வாதாரத்தை தேடி, உருவாக்கி கொடுக்கும் பணி.
அரசியல் என்பது மக்கள் நல்வாழ்வுக்கானது, அரசியல்வாதி என்பவன் மக்கள் நல்வாழ்வுக்கானவன்! இதை தவறாக புரிந்து கொண்ட அரசியல்வாதியின் அரசியல் வாழ்க்கை மக்களால் தீர்மானம் செய்யப்படும்! *மக்கள் மடையர்கள் அல்ல!*
சுய லாபத்திற்காக குரலை உயர்த்தி, லாபம் அடைந்ததும் குரலை தனிப்பவன் தலைவன் அல்ல! அவன் சமூக வீரோதி!
"தியானம்" செய்பவன் எல்லாம் "தியாகி" அல்ல, பொது வாழ்க்கையில் மக்களுக்காக தன் அற்புதமான வாழ்க்கையை அற்பணித்து "தியாகம்" செய்பவன் மட்டுமே "தியாகி"!
Thanks For Your Comment...