Type Here to Get Search Results !

14 ஓட்டு கவிதைகள் | வாக்கு கவிதைகள்

காசு வாங்கி வாக்களிக்கும் "ஏமாளி", எதிர்த்து கேள்வி கேட்க முடியாது திண்டாடும் "கோமாளி". -அல்ஃபியோ
1 of 14
வாக்களிப்பது நம் கடமை

தவறாமல் வாக்களிப்பது கடமை, தவறியும் தவறான நபருக்கு வாக்களிக்காமல் இருப்பதே பெருமை. -லைக்மைஸ்டேட்டஸ்
2 of 14
நம் வாக்கு நம் கடமை


நோட்டுக்கு தன் வாக்கை விற்பதுவும், நோட்டுக்கு தன் கற்பை விற்பதுவும் ஒன்று தான். -அல்ஃபியோ
3 of 14
Vote Quote Tamil


உண்மையான தேச துரோகி, சமூக வீரோதி யாரென்றால், வாக்களிக்க தவறுபவனும், காசு வாங்கி வாக்களித்து, தவறுக்கு துணை போபவனும் தான். -அல்ஃபியோ
4 of 14
Tamil Quote About Vote


நம் வாக்கே நம் "செல்வாக்கு", வாக்குக்கு பணம் வாங்கினால், குறையும் நம் "சொல்வாக்கு", நாளடைவில் நாம் "செல்லாகாசு". -அல்ஃபியோ
5 of 14
Vote Awareness Status Tamil


ஓட்டுக்கு பணம் என்பது, நமக்கு தெரிந்தே நம் வீட்டில் நிகழ்த்த போகும் திருட்டுக்கு, முன்கூட்டி நடக்கும் முன்னோட்டம். -அல்ஃபியோ
6 of 14
Tamil Quote for voters


ஓட்டுக்கு பணம் என்பது: மன்னனும் மந்திரிகளும் நாளை கோடியில் அடிக்கப் போகும், கொள்கையில்லா கொள்ளைக்கு, இன்றே மக்களுக்கு கொடுக்கப்படும் கையூட்டு. -அல்ஃபியோ
7 of 14
Tamil vote Awareness Status


சட்டமன்றத்தில் வெளிநடப்பு என்று வெளி நடிப்பு செய்பவனும், தேர்தலில் காசு வாங்கி வாக்களிப்பவனும் ஒருவனே. -லைக்மைஸ்டேட்டஸ்
8 of 14
Politics Quote Tamil


நம் ஓட்டுக்கு கொடுக்கும் காசு, நமக்கு சொல்லி வைக்கும் "செய்வினை". -அல்ஃபியோ
9 of 14
ஓட்டு கவிதை


நீங்கள் வாக்களிக்க தவறினால், தகுதியற்றவன் மன்னன் என்று முடிசூடி அரியணையேறி அரசாள்வதை தடுக்க முடியாது. -அல்ஃபியோ
10 of 14
வாக்களிப்பது முக்கியம்


ஓட்டுக்கு காசு கொடுப்பது சேவையும் அல்ல, அதை வாங்கி வாக்களிப்பது உரிமையும் அல்ல. அது உரிய நேரத்தில் உரிமை உள்ளவனுக்கு உரியதை செய்யாமல் இருக்க கொடுக்கும் லஞ்ச பணம். -லைக்மைஸ்டேட்டஸ்
11 of 14
Tamil Quote for voters


காசுக்கு தன் வாக்கை விற்பவன், தன் கையால் தன் கண்ணையும், உடன் இருப்பவர் கண்ணையும், சேர்த்து குத்தும் அப்பாவி. விலைக்கு வாங்குபவன் பாவி. -லைக்மைஸ்டேட்டஸ்
12 of 14
Vote tamil quote


ஆட்சியை நிர்ணயம் செய்வது உன் வாக்காக இருக்கும் வரை தான், அது ஜனநாயகம். ஆட்சியை முடிவு செய்வது அவன் கொடுக்கும் பணமாக மாறினால், அது பணநாயகம். -லைக்மைஸ்டேட்டஸ்
13 of 14
ஜனநாயகம் கவிதை


தவறை தட்டி கேட்பவன் தலைவன். ஓட்டுக்கு பணம் கொடுத்து, தவறை ஆரம்பித்து வைப்பவன் எப்படி தலைவனாக இருக்க முடியும்! -அல்ஃபியோ
14 of 14
Thalaivan Kavithai Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad