சொல்லித் தந்துவிட்டு பின்னர் தேர்வு வைப்பவர் வாத்தியார். தேர்வு வைத்துவிட்டு பின்னர் சொல்லித் தருபவர் வாழ்க்கையார்.
1 of 20
விடை அறிந்து எழுத செல்வது தேர்வு. விடை அறியாமல் எழுதிக் கொண்டிருப்பதே வாழ்வு.
2 of 20
வகுப்பில் விளையாடினால் மதிப்பெண் குறையும், வாழ்க்கையில் விளையாடினால் நம் மதிப்பு குறையும்!
3 of 20
சிந்தித்து பின் செய்தால் அது வெற்றி. செய்த பின் சிந்தித்தால் அது அனுபவம்.
4 of 20
இருக்கும் போது மரியாதையை தருவதோ பணம். இறந்தபின் மரியாதையை தருவதோ குணம்.
5 of 20
எல்லோருக்கும் கொடுக்கவும் முடியாது, எல்லாரிடமும் எதிர்பார்க்கவும் கூடாது. மரியாதை...!
6 of 20
முடிந்து போனதை எண்ணி கனவு காணாதே! முடிக்க வேண்டியதை எண்ணி கனவு காண்!
7 of 20
சில வார்த்தைகள் மாறுவதால், பலர் வாழ்க்கையே மாறிவிடுகிறது.
8 of 20
கெடுத்து ரசிப்பதோ பாவம். கொடுத்து மகிழ்வதே புண்ணியம்.
9 of 20
நீங்கள் நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் இது தான் உண்மை. நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரண காரியம் நிச்சயம் இருக்கும்.
10 of 20
நல்லவனா கெட்டவனா என்பது உலகத்துக்கு தேவையில்லை. நாளை ஏதோவொரு வகையில், இவன் நமக்கு பயன்படுவானா என்பது மட்டும் தான் தேவை.
11 of 20
வாழ்க்கை என்பது புல்லாங்குழல் மாதிரி, ஓட்டைகள் பல இருக்கும்! சரியாக கையாள பழகிக் கொண்டால், வாழ்க்கை என்றும் இன்னிசை தான்!
12 of 20
படித்த புத்தகத்தை மீண்டும் படிக்க விரும்பாத நாம், கடந்து போன, நடந்து முடிந்த, மறக்க மறுக்கும், கசப்பான நினைவுகளை மட்டும் மீண்டும் மீண்டும் நினைப்பது ஏனோ!
13 of 20
மரணத்தின் கையில் இருப்பவன், வேண்டாத தெய்வங்களே இல்லை. கஷ்டத்தின் கையில் இருப்பவன், திட்டாத தெய்வங்களே இல்லை.
14 of 20
சாக துணிந்தாலும் "சாவு வந்தால்" தான் சாக முடியும். சாவ பயந்தாலும் "சாவு விட்டால்" தான் வாழ முடியும்.
15 of 20
வலித்தாலும் சிரித்துக் கொண்டே கடக்க பழகிக் கொள். ஏனெனில், ஆறுதல் தந்து தேற்றுபவரை விட, ஆயுதம் ஆக்கி தூற்றுபவர்கள் தான் அதிகம் இங்கே.
16 of 20
யாருக்கு முடிவு எப்போது? எப்படி? என்று தெரியாத உலகில், நீயா நானா என்பது மடமையடா. நீயும் நானும் என்பதே பெருமையடா. அன்பே என்றும் செல்வமடா! நிம்மதியே உண்மை வாழ்க்கையடா!
17 of 20
வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில சிறு தவறுகள், வாழ்க்கை முழுவதும் மறக்க மறுக்கும் பரிசாகி விடும்.
18 of 20
எதையும் கொண்டு செல்ல முடியாது என்பது அறிந்தும், அனைத்தையும் அடையும் ஆசை மட்டும் அடங்குவதில்லை, 😎"மனிதனுக்கு"😎
19 of 20
காசு பணம் இருந்தால் தான் சுடுகாட்டுக்கு கூட சுற்றம் எல்லாம் வரும். காசு பணம் இல்லை என்றால் நடு வீட்டுக்கு உறவுகள் கூட வருவதில்லை.
20 of 20
Thanks For Your Comment...