ஊழல் லஞ்சம் பற்றிய கவிதை வரிகள்| Corruption Tamil Quotes
என் வரிப்பணம் உன் சம்பளம், உன் கடமையை செய்ய நான் ஏன்? கொடுக்க வேண்டும் உனக்கு கிம்பளம். *லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!* டிசம்பர் -9, *சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்!*
1 of 8
லஞ்சம் கொடுப்பது வன்மையாக கண்டிக்க தக்கது. லஞ்சம் பெறுவது வன்மையாக தண்டிக்க தக்கது. டிசம்பர் -9, *சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்!*
2 of 8
மக்கள் பணத்தை சம்பளமாக பெற்றுக் கொண்டு, மக்கள் சேவைக்கு மக்களிடம் கிம்பளம் பெறுவது "கௌரவ பிச்சை". டிசம்பர் -9, *சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்!*
3 of 8
செய்யும் வேலைக்கு ஊதியம் வாங்கி விட்டு ஊழல் செய்யும் பெருச்சாளிகள் சமூகத்தின் கொடிய கொரோனாக்கள். டிசம்பர் -9, *சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்!*
4 of 8
அடி வயிற்று பசியுடன் கை நீட்டினால் "அவர் பிச்சைக்காரன்"! அதிகார பசியுடன் கை நீட்டினால் "அவன் எச்சைக்காரன்"! டிசம்பர் -9, *சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்!*
5 of 8
லஞ்சம் கொடுப்பவன் சமூக விரோதி! லஞ்சம் பெறுபவன் தீவிரவாதி! டிசம்பர் -9, *சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்!*
6 of 8
கையூட்டு கொடுப்பதும் குற்றம், பெறுவதும் குற்றம்! கொடுத்தாலும், பெற்றாலும் கைக்கு போடப்பட வேண்டும் பூட்டு! டிசம்பர் -9, *சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்!*
7 of 8
லஞ்சம் கொடுப்பவன் பாதக செயல் செய்யும் பாவி! லஞ்சம் வாங்குபவன் படுபாதக செயல் செய்யும் படுபாவி! டிசம்பர் -9, *சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்!*
8 of 8
லஞ்சம், ஊழல் சமுதாயத்தின் முதல் எதிரி! லஞ்சம் வாங்கவும் மட்டேன்! கொடுக்கவும் மாட்டேன்
என்று உறுதி எடுப்போம்! மனிதம் மிளிரும் உலகம் படைப்போம்! உங்கள் பதவியும், அதிகாரமும் மக்களுக்காக, மக்கள் நலனுக்காக மட்டுமே! அதை எனக்காக, எங்களுக்காக என்று தவறாக புரிந்து கொண்டு வாங்கி குவிக்காதீர்! காலம் எப்போதும் ஒன்று போல் இருப்பதில்லை! மக்கள் மனநிலை எப்போதும் ஒன்று போல் இருப்பதில்லை! சிந்தித்து பாருங்கள், இருந்தாலும், இறந்தாலும் மக்கள் மனதில் நிற்பது: லஞ்சம் வாங்காத, ஊழல் செய்யாதா அதிகாரிகளின் முகங்களும், எண்ணங்களும், செயல்களும் மட்டுமே! "தான் நான் என்று நினைப்பவன் தன் குடும்பம் தன் வாழ்க்கை என்று செயல்படுவான்! நாடு நாட்டு மக்கள் என்று நினைப்பவன் நாம் நாங்கள் எங்கள் வாழ்க்கை என்று செயல்படுவான்! எப்படி வேண்டுமானாலும் செயல்படு ஆனால் சாதாரண மக்களை வதைக்காதே! அவர்கள் வாழ்க்கையை சிதைக்காதே! ஒவ்வொருவரும் ஆயிரம் ஆசைகளுடன், ஆயிரம் கனவுகளையும், கடமைகளையும் சுமந்து சுற்றி வருகின்றனர்! உன் ஆதிக்க, அதிகார, அடக்குமுறைக்கு அவர்கள் வாழ்க்கையை இறையாக்காதே!
🙏நன்றிகள்🙏
Good And Great Quotes...
ReplyDeleteThanks For Your Comment...