1. நண்பா! எதிரியின் பலம் பொருட்டல்ல! நம் திட்டமும், தைரியமும், திட்டத்தை நோக்கிய முயற்சியும், நம்பிக்கையும் தான் முக்கியம்!
2. உன்னால் முடியும் என்று நீ எண்ணுவதை துணிந்து செய். துணிவில் பிறப்பதே வெற்றி.
3. போராடு நண்பா, போராடு! உன்னால் முடியும், போராடு! தோல்வி வந்தாலும், போராடு! தோல்விகள் வந்தாலும், போராடு! எல்லாம் வெற்றிகள் ஆகும் போராடு!
4. நண்பா...., வலிகள் எல்லாம் உன்னை கொல்வதற்கு அல்ல, நீ போராடி வெல்வதற்கு!
5. வலிகளை தாங்க நினைத்தால் தாக்கிக் கொண்டே இருக்கும்! வலிகளை தாண்ட நினைத்தால் வாழ்வில் வழிகள் பிறக்கும்!
6. தோல்வி என்பது அவமானம் அல்ல, அது நம்மை அவதாரம் எடுக்க செய்து, நம் அடையாளத்தை உலகுக்கு காட்டும் வெகுமானம்.
7. சோதனை என்பது வேதனைக்கு அல்ல, சாதனைக்கான ஒர் வழி.
8. வாழ்க்கையில் வரும் அவமானங்கள் எல்லாம் வலிகள் அல்ல, நம் லட்சியத்தை நோக்கிய பயணத்தின் வழியில் நம்மை செதுக்கி உயர்த்தும் உளிகள் அவைகள்.
9. சில லட்சியங்களை அடைந்தே தீர வேண்டும் என்றால், பல அலட்சியங்களை கடந்தே தீர வேண்டும்...!
10. தன் மேல் அதீத நம்பிக்கை என்பது பிறர் நம்பிக்கை வார்த்தையிலோ இல்லை வாக்கிலோ பிறப்பது அல்ல, நம்பி ஏமாந்து அடிபட்டு மிதிபட்ட பின் தன் மேல் தனக்கே பிறப்பது.
11. முடியாதவன் முடிந்ததை பற்றி புலம்பி கொண்டிருப்பான்! முடியும் என்பவன் முடியாததை முடிக்க முயன்று கொண்டிருப்பான்!
12. நண்பா, உன் திட்டமும், செயலும் சரியாக இருந்தால், உன் முயற்சி யார் தடுத்தாலும், வெல்வது உறுதி.
13. "நான் வென்று காட்டுவேன்" என்ற நம்பிக்கை உள்ள மனது, எத்தனை முறை தோற்றாலும் வெல்லாமல் அடங்காது.
14. முடியும் என்று நம்பு! உன்னால் முடியும் என்று நம்பு! உன்னை நீ நம்பினால், உன் மனம் அதிகம் செயல்படும்! வழிகள் புலப்படும்! வெற்றி உனதாகும்!
15. முயற்சியின் முன்னால்: தோல்வி துரோகம், கேலி கிண்டல், சோதனை வேதனை, எதுவாக இருந்தாலும் மாய்ந்து மடியும். முயற்சி வெல்லும்.
Thanks For Your Comment...