இந்த பதிவில் அறிவுரை வடிவிலான பயன்தரும் பொன்மொழிகளை எழுத்து வடிவிலும் புகைப்படம் வடிவிலும் தருகிறேன். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். படித்து பாருங்கள். பிடித்திருந்தால் பிறர் படிக்க இணைய முகவரியை பகிர்ந்து கொள்ளுங்கள். முற்றிலும் புதிய பொன்மொழிகள் இதோ உங்களுக்காக...
பிடிக்காதவரை பிடித்து வைத்து வாழ முயற்சிப்பது துன்பம், பிடித்தவருடன் பிடிவாதமின்றி, விட்டுக்கொடுத்து, பிரியமாய் வாழ்வதே இன்பம்!
1 of 31
உன்னிடம் இருக்கும் செல்வம் நிலைக்க வேண்டும் என்றால், இல்லாமல் நிற்பவன் முன், உன்னிடம் இருப்பவை குறித்து பெறுமை பிதற்றாதே.
2 of 31
செய்யும் உதவியை சொல்லில் காட்டாதிரு! செய்யும் செயலை சொல்லி காட்டாதிரு!
3 of 31
வெற்று வார்த்தைகளை நம்பி வெந்து தணியாதே! அடுத்தவரிடம் ஆறுதல் தேடி ஏமாளி ஆகாதே!
4 of 31
யார் புன்னகையையும் பறிக்காதே! அதுவே உன் வீழ்ச்சியின் தொடக்கம்! உன் கண்ணீரின் ஆரம்பம்!
5 of 31
உணவை மருந்து! உண்ண மறந்து உழைக்காதே, உழைப்பதே உணவுக்காகத் தான் மறக்காதே!
6 of 31
கஷ்டம் என்று கல்லாக இருந்து விடாதே! ஒவ்வொரு உயிரும் பல கஷ்டங்களை கடந்து தான் முன்னேறி அடுத்த கட்டம் செல்கிறது!
7 of 31
அவசியம் இல்லாத பேச்சுக்கு அவமானம் தேடி வரும்! அளவான பேச்சுக்கு அன்பு நாடி வரும்! அறிவார்ந்த பேச்சுக்கு அறிஞர் சபை கோடி தரும்!
8 of 31
தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் குறைத்துக் கொள் நண்பா! ஏமாற்றம் கிடைக்காதிருக்கும்! அமைதியும், நிம்மதியும் என்றென்றும் நிலைத்திருக்கும்!
9 of 31
அடுத்தவனை கெடுக்க திட்டமிட்டு குழி தோண்டும் நேரத்தை, தனக்காக செலவு செய்தால், குழியும் தோண்டி அடித்தளமும் அமைத்து விடலாம்.
10 of 31
எனக்கு பிடித்தது உனக்கு பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை! உனக்கு பிடித்தது எனக்கு பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை! ஆனால் இந்த தெளிவு அவசியம்!
11 of 31
எதிர் வீட்டு ஜன்னலை உற்று நோக்குவதை விட, தன் வீட்டு கதவுக்கு தாழிடுதல் சிறப்பு!
12 of 31
வார்த்தைகளை வைத்து விவாதம் செய்! வதம் செய்யாதே! சில வார்த்தைகள் வதைக்கும் மரணம் வரை!
13 of 31
நம் பேச்சுக்கு மதிப்பில்லை எனில் அவ்விடத்தை விட்டு அகன்றிடனும்! பட்டு உணர்ந்து திருந்தி திரும்பி தேடும் காலம் வரும்!
14 of 31
பேசும் அவசியம் வந்தால் பேசி விடு! எதிர்க்கும் அவசியம் வந்தால் எதிர்த்து விடு! இரண்டும் இல்லை என்றால் நீ அடிமை தான் இறுதிவரை!
15 of 31
இருக்கும் வழியை மட்டுமே நம்பி உன் வெற்றியை தேடாதே! வழியை உருவாக்கி, அதில் பயணித்து வெற்றி அடையவும் கற்றுக்கொள்!
16 of 31
தகுதி இல்லாதவனிடம் விவாதிக்காதே! அவனிடம் விவாதிப்பதால், உன் தகுதி குறையும், அவன் தகுதி உயரும், மக்கள் மத்தியில்!
17 of 31
கோபம் வரும் போது உன் முகத்தை கண்ணாடியில் பார், அதன்பின் ஒருபோதும் கோபப்படவே மாட்டாய்! உன் அந்த அகோர முகத்தை உன்னால் சகிக்க முடியாத போது, அடுத்தவர் எப்படி சகிப்பது!
18 of 31
அடுத்தவரை திருத்துவதற்கு நாம் இல்லை! நம்மை பார்த்து அடுத்தவர் திருத்தும் படி வாழ்வதற்கு தான் நாம்!
19 of 31
நல்ல எண்ணங்களை விதையுங்கள்! வாழ்க்கை வண்ணங்களில் இல்லை! நல்ல உள்ளங்கள் விதைக்கும் நல்ல எண்ணங்களில் உள்ளது!
20 of 31
மற்றவர் மகிழ்ச்சியில் மகிழ்ச்சி கொள்! மற்றவர் கஷ்டத்தில் உதவி செய்! பணம் இல்லாதவன் ஏழை அல்ல! உதவ மனம் இல்லாதவன் தான் ஏழை!
21 of 31
விட்டுக்கொடுத்து வாழும் கலை அறிந்தால், விட்டுவிட்டு செல்லும் நிலை வராது!
22 of 31
வாழ்க்கையில் சிலரை சாகும் வரை மறக்க கூடாது! சிலரை சாகும் வரை பிரியக் கூடாது!
23 of 31
எவர்க்கும் எதையும் புரிய வைக்க முயற்சிக்காதே! இங்கு எவர்க்கும் எதுவும் புரிய போவதில்லை, அவரவர் கடந்த பாதையை தவிர!
24 of 31
அடுத்தவர்கள் நம்மை பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்பது "அனாவசியமானது"! நம்மை பற்றி நாம் என்ன எண்ணுகிறோம் என்பதே "அவசியமானது"!
25 of 31
குறை மட்டும் காண்பவன் வீண்! கண்ட குறையை நிறை செய்பவன் மேல்!
26 of 31
வழி சொல்ல தவறியவன் எல்லாம் பழி சொல்ல தவறாமல் வருவான்! இது தான் உலகம்!
27 of 31
நமக்காக "தியாகம்" செய்தவர்களை, என்றென்றும் மறத்தல் ஆகாது! நமக்கு "துரோகம்" செய்தவர்களை, ஒரு நொடி கூட நினைத்தல் ஆகாது!
28 of 31
தான் முன்னேற வேண்டும் என்று உழைப்பவன் நிலை முன்னேற்றம் காண்கிறது! அடுத்தவன் முன்னேறுகிறான் என்று நினைப்பவன் நிலை தடுமாற்றம் காண்கிறது!
29 of 31
நம்பியவனை ஏமாற்றி விட்டு, உன்னை நீயே அறிவாளி என்றோ, திறமைசாலி என்றோ, எண்ணாதே! நீ செய்தது துரோகம்! அது அசிங்கத்தின் உச்சம்!
30 of 31
அடுத்தவனை தாழ்த்தி பேசி, தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள முனைபவன், அடிப்படை அறிவற்றவன்! அவன் அறிவிலி!
31 of 31
Thanks For Your Comment...