Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 72 அவை அறிதல் ஸ்டேட்டஸ்

*குறள் 711:* அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். *கலைஞர் விளக்க உரை:* ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

Thirukkural 711




*குறள் 712:* இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். *கலைஞர் விளக்க உரை:* சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்.

Thirukkural 712



*குறள் 713:* அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல். *கலைஞர் விளக்க உரை:* அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது.

Thirukkural 713



*குறள் 714:* ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.

Thirukkural 714



*குறள் 715:* நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. *கலைஞர் விளக்க உரை:* அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.

Thirukkural 715



*குறள் 716:* ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. *கலைஞர் விளக்க உரை:* அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

திருக்குறள் 716



*குறள் 717:* கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொற்றெரிதல் முன்னர் இழுக்கு. *கலைஞர் விளக்க உரை:* மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.

Thirukkural 717



*குறள் 718:* உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. *மு.வ விளக்க உரை:* தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

Thirukkural 718



*குறள் 719:* புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார். *கலைஞர் விளக்க உரை:* நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.

Thirukkural 719



*குறள் 720:* அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

Thirukkural 720


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad