முட்டி தேய தேய நடந்திடுவான், தேடி வந்து, சிரியவர் பெரியவர் பேதமின்றி கை கூப்பி பணிவுடன் வணங்கிடுவான், இவை வெல்லும் முன் நடக்கும் நாடகங்கள்! வென்றபின் நீ தான் முட்டி தேய தேய தேடி நடந்திட வேண்டும், கை கூப்பி வணங்கி நின்றிட வேண்டும்!
பிட்டு நோட்டீஸ் ஏந்தி வருபவனை எல்லாம், சிந்திக்காமல் உச்சத்தில் அமரவைத்தால், சட்டமன்றத்தில் அமர்ந்து பிட்டு படம் பார்க்கத்தான் செய்வான்!
வேலை தேட முன்டியடித்து ஓடுபவர் போல், தேர்தலில் போட்டியிட முன்டியடித்து ஓடுகிறது ஒரு கூட்டம். மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவா? இல்லை தன் மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவா....!...?
தேர்தல் என்றால், முகம் அறியா பணசாலி எல்லாம், பதாகையை ஏந்தி தலைவன் போட்டியில் குதித்து விடுகிறான்.
அரசியல் என்பது 100% மக்களுக்கானது. அரசியலில் ஈடுபடுபவன் தன் நலனையும், தன் குடும்ப நலனையும் பொருட்படுத்தாது, நாட்டு மக்கள் நலனே பெரிதென உழைப்பவன்.
ஆட்சியில் அமர்ந்து, இறங்கும் போது, தான் இறக்கும் வரை, உழைப்பின்றி, நிம்மதியாக வாழ, வழிவகுத்து இறங்குபவன் தலைவன் அல்ல, தன்(நாட்டு) மக்கள் உழைத்து, நிம்மதியாக வாழ வழிவகை செய்து இறங்குபவன் தலைவன்!
ஆட்சி, அதிகாரத்தை, பணம் மட்டுமே முடிவு செய்யும், என்னும் நிலை வந்தால், மக்களாட்சியில் மக்கள் அனைவரும் மடையர்கள்...!
மனிதன் "செழித்து" வாழ தேவை "மனிதத்துவா"! அரசியல்வாதி "கொழுத்து" வாழ தேவை "மதத்துவா"!
தேர்தல் நாள் 19-02-2022 தவறாதீர்கள்! மறவாதீர்கள்! தேர்தலில் வாக்களிப்பது நம் ஒவ்வொருவர் கடமை! சரியான நபரை தேர்ந்தெடுப்பதே நம் ஒவ்வொருவருக்கும் பெருமை!
Thanks For Your Comment...