| தன்னம்பிக்கை கவிதைகள் | Tamil Life Changing Quotes | Tamil Motivational Quotes | Life Motivation Quotes Tamil | Inspiration Quotes Tamil | தன்னம்பிக்கை கொடுக்கும் தமிழ் வரிகள் |
வாழ்வில் சாதனை படைத்த எல்லோருக்கும்
சொல்லும்போதே தொண்டையை அடைக்கும்
பெரும் சோதனைகள் இல்லாமல் இருக்காது.
சோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை…!
1 of 20
எல்லாவற்றிலும் மென்மையை கடைபிடிப்பது
என்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல…
அது பலசாலிகளின் ஆயுதம்…
2 of 20
எந்த ஒரு வேலைகளிலும் நீ
காலம் தாழ்த்துவது என்பது
தோல்வி அடைய அந்த தோல்வியிடமே
தோள் கொடுப்பதற்கு சமம்…!
3 of 20
தன்னம்பிக்கை என்ற ஒன்றை
உன்னிடம் இருந்து சீர்குலைக்கும்
உயிர் கொல்லி நோய் தான் அச்சம்.
அதை போக்கும் மருந்தே தைரியம்…!
4 of 20
எதையும் தாங்கும் மனவலிமை ஒன்று போதும்.
தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்.
5 of 20
வாழ்க்கையில் தினமும் வாய்ப்புகள்
வந்து கொண்டே தான் இருக்கும்
நாம் அதை உபயோகப் படுத்துவதும்
அல்லது நிராகரிப்பதும்
நம் கையில் தான் உள்ளது…!
6 of 20
“தோல்வியும், துன்பமும்”
தனியே வருவதில்லை…!
கூடவே “வலிமையையும்”
அழைத்து வருகிறது..!!
7 of 20
பத்தாவது முறையாக
கீழே விழுந்தவனை பார்த்து…
பூமி முத்தமிட்டு சொன்னது…
“நீ ஒன்பது முறை எழுந்தவன்” என்று…!
8 of 20
மரணத்தை விட கொடுமையானது கவலை.
மரணம் ஒருமுறை கொல்லும்.
கவலை நொடிக்கு நொடி கொல்லும்…
9 of 20
பாசத்தை கொண்டு பல நாள் பயணிக்கலாம்…
நேசத்தை கொண்டு நெடுநாள் பயணிக்கலாம்…
ஆனால் வேசத்தை கொண்டு
ஒருநாளும் பயணிக்க முடியாது…
10 of 20
தோற்றுக் கொண்டே
இருந்தாலும்
கவலைப்படாதே.
மாற்றம் ஒன்றே மாறாதது.
முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதே.
11 of 20
ஒரு நாள் விடியும் என்று காத்திருக்காமல்
இன்றே முடியும் என்று முயற்சி செய்.
வேதனைகள் வெற்றிகளாகும்
சோதனைகள் சாதனைகளாகும்.
12 of 20
வாழ்க்கையில் தகுதி
உள்ளவனைக் காட்டிலும்
தன்னம்பிக்கை உள்ளவனே
வெற்றி பெறுகிறான்.
13 of 20
தடைகள் பல வரினும்,
கலங்கி நின்று விடாமல்,
நம்மால் முடியும் என்று,
நம்பிக்கையுடன் முயற்ச்சி செய்.
வெற்றியை உனதாகும்…!
14 of 20
எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால் என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்…
15 of 20
தோல்விகள் தவழும் போது,
ஏமாற்றம் என்று நினையாமல்.
மாற்றம் என்று நினையுங்கள்…
பாதிப்பு இருக்காது…
உங்களுக்கும் மனதிற்க்கும்…
இதுவும் கடந்து போகும்…
16 of 20
புன்னகையுடனான வாழ்க்கையை
வாழ கற்றுக்கொண்டால்
பகையில்லாமல் வாழும் வாழ்க்கையை
நம்மிடமிருந்து பிறர் கற்றுக்கொள்வார்கள்.
17 of 20
வெற்றி உன் வசம்
தன்னம்பிக்கை முயற்சி இருந்தால்.
தடைகற்களை படிகற்களாக மாற்று.
தோல்வி என்பது முடிவல்ல.
வெற்றி என்பது எளிதல்ல.
உன்னால் முடியும் உன்னால் முடியும்…
18 of 20
நேரம் கடக்க இதயம் துடிக்க
முயற்சி நடக்க பாறை உடைக்க
உனக்காய் உலகமே காத்திருக்கிறது
மீண்டு வா புது வரலாறு நீ படைக்க
இறைவனை வணங்கி…
19 of 20
எவன் “மிதித்தாலும்” முன்னேறுவேன்…
என்னும் “மிதிவண்டி” போல் வாழுங்கள்…