Tamil Motivation Quotes | Motivation Kavithai | Tamil Motivation Status | தன்னம்பிக்கை கவிதை | மோட்டிவேஷன் கவிதை | Tamil Motivational Life Quotes | Kalai Vanakkam Motivation Quote Image
தளர்ந்து நிற்க்காதே!
சோர்ந்து இருக்காதே!
வளர்ச்சியில் வீழ்ச்சி
என்பது ஒரு நிகழ்ச்சி
மட்டும் தான்.
முயன்றால் எட்டும்
உயரம் தான்
உன் வெற்றி.
2 of 20
நண்பா எந்த அளவுக்கு உயரம் செல்ல
வேண்டும் என்று நினைக்கிறாயோ!
அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளை
கடந்து செல்ல உன்னை தயார் படுத்திக்கொள்.
உன் வெற்றியை தடுக்க யாரும் இல்லை இங்கு.
3 of 20
தடைகளையும், எதிர்ப்புகளையும்
துணிவுடன் எதிர்கொண்டு
முன்னேறும் போது, வெற்றிகள்
மலராவும், மாலையாகவும்,
மகுடமாகவும் வந்து சேரும்.
5 of 20
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில்
தோன்றி விட்டால்.
எது இருந்தாலும் இல்லை என்றாலும்
சாதிக்க முடியும்.
உன் விடா முயற்சியால்.
6 of 20
உனக்கான அடையாளத்தை
உலகம் உணரும் வரை,
உன்னை சுற்றி வரும் விமர்சனம்
ஒவ்வொன்றும் உனக்கு எதிராகத்தான் இருக்கும்.
எண்ணி வருந்தினால், வருந்திக்
கொண்டே தான் இருக்க வேண்டும்
ஏறி மிதித்து விமர்சனங்கள் மீது நிமிர்ந்து நில்.
காலம் மாறும் முயற்சி கைகொடுக்கும்.
கனவு நனவாகும் உலகம் உன்னை உணரும்.
7 of 20
ஒவ்வொரு தோல்வியும் உன்னை
புது வெற்றிக்கு தயார் செய்யும்.
கனவுகள் கலைந்து போகலாம்.
நம்பிக்கையை தகர்ந்து போகவிடாதே.
நண்பா! வெற்றி உனதே! வெற்றி உனதே!
8 of 20
இலைகள் உதிர்வதால் மரங்கள் வாடுவது இல்லை.
மீண்டும் புதிய இலைகளை தோற்றுவிக்கும்.
தோல்வி வந்தால் வாடாதே.
புதிய இலக்கை நோக்கி பயணம் செய்.
11 of 20
ஒரு வருடம் என்பது,
365 நாட்களை கொண்டதல்ல.
365 வாய்ப்புகளை கொண்டது.
வாய்ப்புகளை பயன்படுத்தி
வெற்றியை நமதாக்குவோம்.
12 of 20
பார்த்திருந்தால், எதிர்பார்த்திருந்தால்,
காத்திருந்தால், எதுவும் நடக்காது,
கிடைக்காது, இறங்கி போராடு.👍
சோதனைகள் சாதனைகள் ஆகும்.
👉வெற்றி உன் மகுடம் ஆகும்.👑
14 of 20
முதலில், உங்களால் முடியும் என்று நம்புங்கள்.
பின் முயற்சி செய்யுங்கள்.
பிறகு எல்லாம் வெற்றி தான் உங்களுக்கு.
முடியாதது ஏதும் இல்லை இங்கு.
முயன்றால் எல்லாம் சாத்தியமே.
15 of 20
நண்பா! நீ அடைய நினைத்த
இலக்கை அடையும் வரை.
கல் வந்தாலும் சொல் வந்தாலும்
கலக்காமல் நீ முன்னேறு.
நண்பா! அனைத்துக்கும் பதில்
சொல்லும் உன் வெற்றி.
16 of 20
துன்பங்கள் துரத்தினாலும்,
சோர்ந்து போகாமல், எதிர்த்து நின்று
வெற்றி பெறுவதே மனிதனுக்கு அழகு.
சந்தோஷமாக வாழ்வதை விட
சவால்கள் மேல் சவாரி செய்து வாழ்வதே கெத்து.
17 of 20
அவமானப் படும்போது அவதாரம் எடு.
வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு.
புண்படுகிற போது புன்னகை செய்.
வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துகாட்டு.
18 of 20
மரியாதை கிடைத்தால் மதித்து நில்.
அவமானம் கிடைத்தால் மிதித்து செல்.
இலக்கை நோக்கிய பயணத்தில்
வீழ்ந்து விடுவேன் எனும் பயம் வேண்டாம்.
தாங்கி தூக்கி விட ஒரு கரமாவது இருக்கும்.
20 of 20