Attitude Quotes Tamil
பணம் இருந்தால் தான் மனிதனை மனிதன் மனிதனாக மதிப்பான் என்றால், அந்த மதி கெட்ட, மனிதம் இல்லா, மானிடர் மரியாதை தேவையே இல்லை. -அல்ஃபியோ
அமைதியாக இருந்தால் அடிமை என்று எண்ணி விடாதே நண்பா! அடிபட்டு, மிதிபட்டு, பாயும் நேரத்திற்கு, நேர்த்தியாக பதுங்கி இருக்கும் புலியாகவும் இருக்கலாம்!
அமைதியா இருக்கான் என்று அதிகம் ஆடாதே! மதிப்பா பேசினால் மதிக்கவும் தெரியும்! இழிவா பேசினா இழுத்து வச்சி இடிக்கவும் தெரியும்!
நீ உன் பலத்தை அறியாத வரை, எதிரே நிற்பவன் எதிர்த்து நிற்பான். நீ உன் பலத்தை அறிந்தால், எதிரே நிற்பவன் எழுந்து நிற்பான்.
மிதித்தால் துணிந்து நில். மதித்தால் பணிந்து செல். பாசம் வந்தால் பணிந்து செல். துரோகம் நேர்ந்தால் துணிந்து நில்.
நான் என் இயல்போடு வாழ்கிறேன். யாருக்கும் என்னை நிரூபித்து காட்டி வாழும் அவசியம் எனக்கில்லை.
கண் முன் கத்தி வந்தாலும் கத்தி சொல்வேன் உண்மையை. புத்தி உள்ளவன் புரிந்து கொள்வான் என்னையை.
அடங்கிப் போவதிலும், அடிபணிந்து போவதிலும், சிறிதும் தவறில்லை, அறிந்து, புரிந்து, உணர்ந்தவர் எனில்! இவை ஏதும் உணராதவனிடம், நெஞ்சை நிமிர்த்தி, திமிராக இருப்பதில் துளியும் தவறில்லை!
மதிக்கும் வரை நான் ரோஜா தான். ஆனால் மிதிக்க நினைக்கும் முன் நான் முள்ளாகி இருப்பேன். எவனா இருந்தாலும், எவ்வளவு தூரம் சென்றாலும்.
பணிந்து போவதில் தவறில்லை! ஆனால், ஏறி மிதிப்பது தெரிந்தால், ஏறி மிதித்து தள்ளி கடந்து போ!
என்னை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முயற்சிக்காதே! ஒரு வேளை அது உன் நிம்மதியை கெடுக்கக் கூடும்…!
எனக்கென்று என் வாழ்வில் சோகங்கள் ஏராளம். ஆனால் அது, என்னைத் தவிர வேறு யாரையும் காயப்படுத்த அனுமதித்ததில்லை.
யார் யாரை எங்கெங்கு எப்படி எப்படி வைக்க வேண்டுமோ, அப்படி அப்படி அங்கங்கு வைத்து விடு. யார் யாரிடம் எப்படி எப்படி இருக்க வேண்டுமோ அப்படி அப்படி இருந்து விடு. இல்லை கஷ்டம் உனக்கு தான்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிந்திக்காமல் இருந்து விட்டேன். கெட்டவனையும் நல்லவன் என்று நம்பி சிரித்து விட்டேன், சூழ்ச்சியால் வீழ்ந்து விட்டேன். ஆதலால் இப்போது அழுகையே ஆறுதலாய் போனது எனக்கு.
அடங்கி போகவும் மாட்டேன். அடக்கி ஆளவும் மாட்டேன். என் வாழ்க்கை, என் வழியில் வாழ்கிறேன்.
அடிமை போல் நடத்துபவர் முன் திமிராக நடப்பதும், அன்பை மட்டுமே காட்டுபவர் முன் அடிமைப்பட்டு போவதும் தவறேயில்லை.
இறங்கி சென்று பேசுவதில் தவறில்லை. தேவையில்லை என்று எண்ணுபவர் இடம் இறங்கி சென்று பேசுவது தவறு தான்.
மறந்து விட்டேன் என்று மட்டும் நினைத்து விடாதே, மரணித்தாலும் மறக்காது உன்னால் நான் அடைந்த வலியும் வேதனையும். திருப்பி கொடுக்க நினைக்க வில்லை, திருப்பி கொடுக்கும் படி வைத்துவிடாதே.
என்ன தான் நமக்கு தேவை இருந்தாலும், சிலரை சில காரணங்களால் தேடி போகாமல் இருப்பதில் இருக்கிறது “வைராக்கியம்”.
என் ஆக்கத்திற்கு ஊக்கமாக இல்லாமல் இரு பரவாயில்லை! ஆனால், தடையாக மட்டும் இருந்து விடாதே! உடைத்தெரிந்து முன் செல்ல நேரிடும்!
என்னை வீழ்த்தி முடக்கிட உனக்கிருக்கும் தைரியத்தை விட, வீழ்ந்தாலும் எழுந்து நடக்க, எனக்கிருக்கும் முயற்சியும், தன்னம்பிக்கையும் மிக அதிகம்! முடக்க முயன்று கொண்டே இரு, வெல்வது நானும் என் முயற்சியும் தான்!
வீரத்தால் வீழ்ந்தால் பரவாயில்லை, துரோகத்தால் வீழ்ந்தால், மீண்டு வந்து, துரோகி முன், துரோகியை விட ஆக சிறப்பாக வாழ்ந்து காட்டிட வேண்டும்.
Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.