Kadhal Kavithai For Lover | Kadhal Kavithai For Wife | காதல் கவிதைகள்
உன் முகம் பார்த்து விட்டால் போதும்,
பல யுகங்களை கூட சுகங்களாக கழித்திடுவேன்.
வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து.
2 of 25
முகம் பார்த்து வந்த காதல்
மறைந்து விடும்.
பணம் பார்த்து வந்த காதல்
பறந்து விடும்.
உள்ளம் பார்த்து வந்த காதல்
உயிர் உள்ள வரை தொடர்ந்து வரும்.
4 of 25
யார் இந்த தேவதை…!
உறங்கும் விழிகளுக்குள் கனவை கொண்டு வருவது.
கனவை தந்து விட்டு என் நினைவை கொண்டு செல்கிறாள்.
கனவுலகிலயே என்னை சஞ்சரிக்க வைக்கிறாள்.
கற்பனையில் என்னை மிதக்க வைக்கிறாள்.
யார் இந்த தேவதை…!
5 of 25
வழி பார்த்து நடக்காமல்,
உன் விழி பார்த்து நடந்ததால்.
வழுக்கி விழுந்தேன் அடி
காதல் என்னும் பள்ளத்தில்…!
கை தூக்கி விடுவாயா கரைசேர.?
6 of 25
அன்று நான் தனியாக இருந்தாலும்
உன் நினைவின்றி நிம்மதியாக இருந்தேன்!
இன்று கூட்டத்திற்குள் நின்றாலும் உன் நினைவால் தனியாக உணர்கிறேன்!
7 of 25
உன் பார்வையில் பற்றி எரியும் தீக்குச்சி நான்.
எரிந்து கொண்டே இருப்பேன்.
நீ திரும்பிவந்து அனைக்கும் வரை அல்ல.
நீ விரும்பிவந்து அணைக்கும் வரை.
8 of 25
அரை நொடி வாழ்ந்தாலும் உன்
அரவணைப்பில் நான் வாழ வேண்டும்.
அடுத்த நொடி மரணம் வந்தாலும்
உன் மார்பில் சாய்ந்து நான் சாக வேண்டும்.
12 of 25
உன் குறும்பு பேச்சில் தொலைந்து
போனதடி என் இரும்பு இதயம்…!
உனக்கு பிடிக்கிறதா பிடிக்கலையா
தெரியாமலே ரசிக்குதடி என்
இதயம் உன்னை…!
13 of 25
உலகில் உள்ள அனைத்து பூக்களின்
வாசங்களும் சற்று குறைவு தான்.
உன் கூந்தல் சூடி பின் வாடிப்போன
அந்தப் பூக்களின் வாசத்தின் முன்..!
16 of 25
மானும் மீனும் வாழும் கண்ணில்
என்னை வைத்தாய்.
தேனும் பாலும் ஊறும் சொல்லில்
அன்பை வைத்தாய்.
ஊனும் உயிரும் எல்லாம் எந்தன்
உறவில் வைத்தாய்.
ஈர் உயிரை ஓர் உயிராக்கி
புத்துயிர் தந்தாய்.
17 of 25
எழுதிட முடியவில்லை எழுதி எழுதி
எழுது கோலும் ஏங்கி போனது.
கவி வரிகளும் நீண்டு போனது.
உன் அழகை கண்டு💃🖋️…!
18 of 25
உன் காந்த பார்வையால்
எனை சுண்டி இழுக்கிறாய்.
சிலிர்த்தது என் நெஞ்சம்.
அடைந்தேன் உன்னிடம் தஞ்சம்.
22 of 25
வானில் நிலவை காணவில்லையாம்
விண்மீன்கள் என்னிடம் சொன்னது.
நான் எப்படி சொல்வது!
நிலவு என்னுடன் இருப்பதை…!
23 of 25