யாரிடமும் காயப்படாத வரை
நம் மனதும் அழகு தான்…!
யாரையும் காயப்படுத்தாத வரை
நம் சிரிப்பும் அழகு தான்…!
2 of 15
பாசமாக இருந்தாலும் பகையாக இருந்தாலும்
அளவோடு தான் காட்ட வேண்டும்.
உன் பாசம் சிலருக்கு வெறுப்பாக இருக்கலாம்.
பகை எப்போது வேண்டும் என்றாலும் பாசமாக மாறலாம்.
பாசம் ஒருபோதும் பகை ஆகி விடக்கூடாது.
3 of 15
இருளின்றி நட்சத்திரங்கள் ஜொலிப்பதில்லை.
சோதனைகளின்றி திறமைகள் வெளிப்படுவதில்லை.
சோதனைகளை சாதனைகள் ஆக்குவது தான் வாழ்க்கை.
4 of 15
செய்த நன்மைகளை நினைவில் வைக்காதே.
செய்த தவறுகளை நினைவில் வை.
மீண்டும் தவறு செய்யாமல் இருக்க.
5 of 15
வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்.
அதில் எல்லா பலசாலியும்
வெற்றி பெறுவதில்லை.
முடியும் என்ற நம்பிக்கை உடையவன்
மட்டுமே வெற்றி பெறுகிறான்.
6 of 15
துரோகத்தின் சிறப்பு என்னவென்றால்..!
அது அறியாத முகங்களால்
நிகழ்வது இல்லை..!
நன்கு அறிந்த
முகங்களால் தான் நிகழ்கிறது..!
8 of 15
கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார்
வாய்ப்பு மட்டுமே தருவார்.
வரம் ஆக்குவதும் விரயம் ஆக்குவதும்
நம் கையில் தான் உள்ளது.
9 of 15
நெருக்கமானவர்களால் மட்டுமே முடியும்.
ஒரு சொல்லில் அழ வைக்கவும்.
ஒரு சொல்லில் சிரிக்க வைக்கவும்.
10 of 15
இருந்தால் மட்டும் புன்னகைப்பது அல்ல வாழ்க்கை.
இல்லாத போதும் புன்னகைப்பது தான் வாழ்க்கை.
வாழ்க்கை எப்போது எப்படி மாறும்
என்று யாருக்கும் தெரியாது.
11 of 15
நல்லவனையும் கெட்டவனையும்
கண்டு பிடித்து விடலாம்.
ஆனால், துரோகியை
கண்டு பிடிப்பது கடினம் தான்…!
12 of 15
இந்த உலகில் உண்மையான அன்புக்கு
மதிப்பும் மரியாதையும் குறைவு தான்.
வசதியையும் வேசங்களையும் மட்டுமே
கொண்டாடும் உலகம் இது…!
13 of 15
நமக்கு வரும் பிரச்சினைகளை
தீர்க்க யாரும் வர வேண்டாம்…!
ஆனால் அந்த பிரச்சினை என்ன என்று
காது கொடுத்து கேட்க ஒருத்தராவது வேண்டும்.
அனுபவபடத்தில் உணர்ந்து கொண்டது.
15 of 15
தோழர்களே தோழிகளே அனைத்து பதிவுகளுக்கு கீழும் கமெண்ட் பாக்ஸ் என்று ஒன்று உள்ளது. அதில் பதிவு பிடித்திருந்தால் வாழ்த்திவிட்டு செல்லுங்கள் இல்லை என்றால் தூற்றிவிட்டு செல்லுங்கள். வணக்கம்.