15+ தனிமை தமிழ் கவிதைகள் – Thanimai Tamil Kavithaigal 2024

தனித்திருந்து விழித்திருந்து
பழகிப்போன எனக்கு இப்போது
தனித்திருப்பதும் விழித்திருப்பதும்
பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை…!

1 of 15
Alone tamil quote

பேசாத மௌனங்கள் குழந்தை போல் ஆனதே.
இரவோடு கண்ணீரும் கானல் நீர் ஆனதே.
அன்பும் ஆதரவும் மருந்தாகி போனதே.
என் தனிமைக்கு துணை யாரும் இல்லாமல் போனதே.

2 of 15
தனிமை கவிதை

எத்திசையில் சென்றாலும் அத்திசை
வந்து என்னை வாரியனைத்து
கொள்கிறது தனிமை..!

3 of 15
Alone tamil quote

ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் துணை
இல்லாத போது தான் தெரியும்
அன்பின் அருமையும்
தனிமையின் கொடுமையும்…!

4 of 15
Thanimai tamil quote

கனவில் வாழும் வாழ்க்கை,
விடிந்தவுடன் முடிந்து விடும். ஆனால்,
காலத்தால் கிடைக்கும் வாழ்க்கை
கடைசி வரை உன்னுடன் இருக்கும்.
எனக்கு காலத்தால் கிடைத்த வாழ்க்கை
தனிமை தான் போலும்…!

5 of 15
Tamil lonely lines

தனியாய் நின்று ஜெயிப்பவனை விட
அதிக சக்தி வாய்ந்தவன் உலகில்
எங்கும் கிடையாது…!

6 of 15
வெற்றி கவிதை

சில நேரங்களில் தனிமையை
தனிமையில் கடப்பது கடினம்.
சில நேரங்களில் தனிமை
தான் இனிமை.

7 of 15
Thanimai tamil kavithai



மனிதர்களால் தர முடியாத
ஆறுதலை கூட சில நேரம்
தனிமை தந்துவிடும்.

8 of 15
Thanimai kavithai

தனிமை தான் கற்றுக் கொடுக்கும்
வாழ்க்கையின் மறுபக்கத்தை.

9 of 15
தனிமை வாழ்க்கை

வாழ்க்கையில் ஆசைகள்
அனைத்தும் நிராசை ஆகும் போது.
ஆதரவாய் வந்து ஆறுதல் சொல்கிறது தனிமை.

10 of 15
தனிமை வரிகள்

சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்தாலும்.
நம்பி ஏமாந்த மனதுக்கு
ஆறுதல் தனிமை தான்…!

11 of 15
Thanimai kavithai

உன் நினைவுகளும் உன் கை கோர்த்த
சுகமான நிமிடங்களும் தான்
நீ இன்றி போனாலும் என்
தனிமையை இனிமை ஆக்குகின்றன.

12 of 15
தனிமை கவிதை

தனிமை எனக்கு பிடிக்கும்
ஏன் என்றால் இங்கு என்னை
காயப்படுத்த யாரும் இல்லை…!

13 of 15
தனிமை கவிதை

தனிமை ஒன்றும் எனக்கு புதிதல்ல!
தனிமைக்கும் நான் புதிதல்ல!
புதுமையெல்லாம் என்னை
புதிதாய் பார்ப்பவர்களுக்கு தான்.

14 of 15
தனிமை கவிதை


தனிமையில் வாழ்வதே இன்பம்
என்று ஏற்றுக் கொண்டேன்.
மனிதர்களின் சுயரூபம்
அறிந்த பின்.

15 of 15
Thanimai Kavithai

Leave a Comment