Sad Love Quotes In Tamil | காதல் சோகக் கவிதைகள்
என் வாழ்வினில் நீ பாதி என்று
சொல்லிக் கொண்டே இருப்பாய்..!
அப்போது புரியவில்லை அர்த்தம்..!
இப்போதுதான் புரிகிறது அர்த்தம்..!
பாதியிலேயே விட்டு செல்வது தான்
நீ சொன்ன அந்த பாதி என்று💕💔…!
1 of 22
உன் நினைவுகளோடு, நீ பிரிந்து
சென்ற பின்பும் பேசுகின்றேன்.
மௌனம் என்னும் வார்த்தைகளால்,
என் கண்கள் சிந்தும் கண்ணீரோடு.
2 of 22
நினைவுகள் என்னும் தீயை
நெஞ்சில் வைத்து கொழுத்தி விட்டு விட்டு
நிம்மதியாக நீ சென்றுவிட்டாய்!
நித்தம் நித்தம் நினைத்து பற்றி எரிவது
என் உள்ளம் தானே! என் உயிரே.!
3 of 22
காற்று கூட கலங்குகிறது
என் கவலை கண்டு.
ஆனால், நீயோ! என்னை விட்டு
விலகிச் செல்கிறாய்.
என்னை தனியே தவிக்கவிட்டு.
4 of 22
எனக்கு நீ கிடைத்தது வரம் தான்
இன்றும் என்றும் என்றென்றும்.
ஆனால், நான் தான் உனக்கு
ஏனோ பாரம் ஆகி விட்டேன்..!.?
நீ இல்லை என்றால் என்ன எனக்கு!
நீ தந்து சென்ற நினைவுகள் போதும்மடி.!
6 of 22
உயிர்த் துடிப்புகளுடன் பல
நடமாடும் கல்லறைகள் வாழ்ந்து
கொண்டு தான் இருக்கின்றன.
காதலின் வலிகளை சுமந்து கொண்டு.
7 of 22
காலங்கள் பல கடந்தாலும் உனக்காக
என் இதயத்தில் ஒதுக்கப்பட்ட இடம்!
வெற்றிடமாகத் தான் இருக்கும்!
காரணம் நீ விட்ட வெற்றிடத்தை
நீ தான் நிரப்ப வேண்டும்! இல்லை,
உன் நினைவுகள் நிரப்பிவிட்டு போகட்டும்.
8 of 22
நீ இல்லா என் நினைவுகள்
பாலைவன சுடு மணல் போன்றவை!
நீ இல்லா நான் வாழும் வாழ்க்கை
பாலைவனத்தில் நீர் தேடி அலையும் ஒரு
பறவையின் உயிர் பிரியும் தருணம் போன்றது!
9 of 22
உயிரினும் மேலாக ஒருவரை நம்பி.
அவரின் மாற்றங்களினால்
மாறும் நிலைக்கு தள்ளப்படும்
இதயத்தின் வலிகள் என்றுமே
தீராத மௌனராகங்கள்………..!
10 of 22
காதல் என்பதனை கற்பனை
செய்வது எளிது தான்.
ஆனால், அதன் வலியை
காதலித்தவர் மட்டுமே உணர முடியும்.
12 of 22
உன்னை மறக்கவும் மணக்கவும்
முடியாத பாவியடி நான்…!
அழியாத சோகத்தை என்னில் சுமந்து
உன் நினைவுகளை மனதில் சுமந்து
வாழ்கிறேன் தனிமையில்…!
14 of 22
அளவில்லா உன் அன்பு
கடைசியில் கண்ணீர் தந்து
காணாமல் போனது ஏனோ.?
கலங்கியது என் கண்கள் மட்டும்
அல்ல என் இதயமும் தான்…!
15 of 22
என் காதல் கவி வரிகள் புரிந்த உனக்கு,
வலி வரிகள் புரியாமல் போனது ஏனோ..!
அன்பு கொண்டது என் தவறும் அல்ல.
பிரிந்து சென்றது உன் தவறும் அல்ல.
காதல் காயம் காலம் வரை தொடருமே…!
16 of 22
காதலி உன்னை கவி வடித்து
காதல் செய்தேன்…!
காற்றோடு சென்று விட்டாய்.
கவியே காதலாக மாற்றம் கண்டது.
நான் என் கவிக்குள் மூழ்கி விட்டேன்.
17 of 22
Sad Life Quotes In Tamil | வாழ்க்கை சோகக் கவிதைகள்
கலைந்து போன கனவுகளுக்கு
கற்பனைகளின் உயிரூட்டி
கொண்டிருக்கிறேன்.
கண்ட கனவுகளை
கற்பனையிலாவது வாழ்ந்து
விட வேண்டும் என்பதற்காக.
18 of 22
வார்த்தைகள் கேட்பார் இன்றி
மௌனமானது என் வாழ்க்கை,
என் உணர்வுகளை கூற கிடைத்த
கடைசி வாய்ப்பு என் கண்ணீரும்
இந்த கவிதையும் தான்😂😂😂…!
19 of 22
அம்மா வலியோடு நான்வாழ
வலியோடு பிரசவித்தாயோ அம்மா.
வலிக்கிறது உன் பிரசவவலியைவிட
பிறர் தரும் வேதனை வலி.
உனக்கு வலிதந்த நான் உன் கருவறையிலேயே
கல்லறையாகி இருக்க மாட்டேனோ ஏங்குகிறேன் இப்போது.
20 of 22
இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை
என்னும் போது தோன்றியது.
“வாழ்க்கை போகும் தூரம் வரை
நானும் போக வேண்டும்”…!
21 of 22
Tamil Inspiration Life Quote
நண்பா தொலைந்த வாழ்வினை
தேடிக்கொண்டு இருக்காது
தொடரும் வாழ்வினில்
உன் கால் தடம் பதித்து விடு.
வானம் போல் உலகம்
அண்ணாந்து பார்க்கும் உன்னை.
22 of 22





















