Tamil Kadhal Kavithaigal
பொல்லாத நிலவொன்று என் முன்னே வந்தது.
பொய் பேசா என்னையும் பொய் பேச வைத்தது.
மை இட்ட கண்களால் என்னை வீழ்த்தி,
கவி அறியா என்னையும் கவி அளக்க வைத்தது.
1 of 25
உன் அன்புக்கு அடிமையாக,
ஆசை தீரா காதலுடன்,
மோகம் குறையா காமத்துடன்
ஆயுள் வரை உன் கரம் பற்றி
வாழ்ந்திட ஆசையடி எனக்கு.
2 of 25
மரண கிணற்றில் சுற்றும் பைக்கைப்போல்,
உன் மரண கண்களில் சுற்றி கொண்டு இருக்கிறேன்.
அணைப்பாயா இல்லை ஆறுதல் சொல்வாயா…?
விடை கொடுப்பாயா இல்லை விலகி செல்வாயா…?
3 of 25
வெட்ட போவது என்னவோ என்னைத்தான்.
இருந்தும் தலை ஆட்டி கொண்டே வருவேன்.
வெட்டுவது உன் விழியால் என்பதால்…!
4 of 25
காதல் கவிதைகள்
வருடங்கள் பல கடந்து வயதான பின்,
நீ வந்து என்னை சந்தித்தாலும்,
அறிமுகம் இன்றி அறிந்திடுவேன்
நீ தான் என்று.
உன்னை பதித்து வைக்க வில்லை
பொரித்து வைத்திருக்கிறேன் இதய சுவட்டில்.
8 of 25
கடவுள் உன்னை யோசித்து வடித்தானோ!
இல்லை நேசித்து வடித்தானோ!
இப்படி ஒரு அழகு கவிதையை
படைத்து அனுப்பி விட்டான் எனக்காய்.
9 of 25
கண்களால் எனை கடத்தி சென்றாய்.
வசியம் செய்து இதயம் தின்றாய்.
என் இதயம் உன்னிடம் அகதியாய்.
நான் உன் காதலிடம் கைதியாய்.
12 of 25
கண்கள் பேசுவதும்,
இதழ்கள் பேசுவதும்,
உன்னிடம் மட்டும் தான்.
இதயம் பேசு துடிப்பதும்
உன்னிடம் மட்டும் தான்.
13 of 25
உன் விழியின் வெளிச்சத்தில்
வீழ்ந்து விட்ட விட்டில் பூச்சி அடி நான்.
எழுந்து விட நினைக்கும் போதெல்லாம்
மீண்டும் வீழ்ந்து போகிறேனடி.
உன் விழியழகில்…!
14 of 25
விழி திறந்து பார்க்கின்றாய்.
வழி தெரியாத குருடனாய் நிற்க்கின்றேன்.
விலகி கொஞ்சம் நில்லடி,
இல்லை வீழ்ந்து விடுவேன் நானடி.
15 of 25
உன்னை நேசிக்க,
உன்னை வாசிக்க,
உன்னையே சுவாசிக்க
ஒரு வரம் தா அல்லது
அதேபோல் ஒரு
சாபம் தா…!
வாழ்ந்து விடுவேன்
ஜென்மம் முழுவதும்
சந்தோஷமாக…!
18 of 25
உன் சிறு நிராகரிப்பைக் கூட
இதயம் தாங்குவதில்லை.
உன் உயிரை என் உயிரை விட
அதிகம் நேசித்த காரணத்தால்.
19 of 25
நீ என்னுடன் பேசும் பொழுதுகளில்
நேரம் போதாமல் இருக்கிறது.
நீ பேசாத நொடிகளில் நேரம்
போகாமல் இருக்கிறது…!💃💖🚶
21 of 25
மலரும் போது பூக்கள் அழகு.🌺
ஒளிரும் போது நிலவு அழகு.🌜
என் அன்பை நீ உணரும் போது
நம் காதல் அழகு.💖 உன்னோடு
நான் உனகாகத் தான் நான்.💞💞
22 of 25
சற்றும் எதிர்பார்க்கவில்லை,
இரவோடு இரவாய் என் மனதை
நீ இரவலாக என்னிடம் இருந்து
தட்டி பறித்து செல்வாயென்று.💕
23 of 25
உணர்வின்றி கிடக்கிறேன்.
உணர்வூட்ட உனை அழைக்கிறேன்.
அதை கவிதையாய் வடிக்கிறேன்.
பதில் சொல்வாயோ! இல்லை,
பறந்து செல்வாயோ!
25 of 25
























