வணக்கம் நண்பர்களே! உங்களை LikeMyStatus இணையதளத்தில் மனமார வரவேற்கிறோம்!
Life Quotes in Tamil தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, இங்கு வாழ்வின் ஆழ்ந்த அர்த்தங்களையும், நம்மை சிந்திக்க வைக்கும் வாழ்வியல் உண்மைகளையும் அழகாகக் கூறும் வாழ்க்கை சிந்தனைகள் கிடைக்கின்றன. தினசரி வாழ்வில் நம்மை தூண்டும் வாக்கியங்கள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் இங்கு உங்களுக்காக காத்திருக்கின்றன.
இந்த தொகுப்பில் நீங்கள் காணலாம்: Motivational Life Quotes in Tamil, Tamil Life Motivation Status, Positive Life Quotes in Tamil, Deep Thinking Quotes in Tamil, Whatsapp Tamil Life Quotes, Tamil Reality Life Quotes, மற்றும் Wisdom Quotes in Tamil. இந்த வரிகள் உங்கள் மனதை மாற்றக்கூடிய பலம் கொண்டவை.
Life quotes In Tamil
🙏🚶மனிதன் 💃🙏
வாழ்நாள் முழுவதும் தேடி தேடி
கடைசியில் கல்லறையில் தான்
கண்டுபிடிக்கிறான் நிம்மதியை.
“சுமதியை கூட கண்டு பிடித்து விடலாம்.
ஆனால், இந்த நிம்மதியை”….!!!???
1 of 46
ஓராயிரம் கஷ்டங்களை
மனதில் மறைத்து வைக்க,
காலம் கண்டுபிடித்த ஒற்றை
வார்த்தை ஒன்னும் இல்லை..!
2 of 46
உதட்டில் ரசத்தையும்,
உள்ளத்தில் விஷத்தையும்
வைத்திருக்கும் மனிதர்கள்
நடுவே வாழ்க்கை நகர்கிறது.
3 of 46
புயலின் வேகத்தை கணிக்க
முடிந்த மனிதனால்.
ஒரு மனித மனதின் அடுத்த
நகர்வுகளை கணிக்க முடியாது
போய்விட்டதே…!
முடிந்திருந்தால் தற்காத்து கொள்ள
வசதியாக இருந்திருக்கும்.
4 of 46
நம்முடன் பழகுபவர்களில்
பலர் சிறந்த நடிகர்கள் தான்.
வார்த்தைக்கு சாயம் பூசி
வாழ்க்கையுடன்
விளையாடி விடுகின்றனர்.
5 of 46
பாசம் வைப்பது தவறில்லை.
ஆனால், பாசத்தின் அருமை
தெரியாதவர்கள் மீது பாசம்
வைப்பது மிகப்பெரிய தவறு தான்.
6 of 46
அழுகை தவறில்லை!
அழவைக்க நினைப்பவர்
முன் அழுகை தவறு தான்.!
7 of 46
உள்ளத்தை கட்டிப்போட தெரிந்தவன்,
யாருமே இங்கு பிறக்கவில்லை.
மனது ஒரு குரங்கை போன்றது.
அடக்க நினைத்தால் அலையும்.
8 of 46
ஏதாவது வரம் வேண்டும் என்று.
கேட்டு கொண்டே இருக்கிறோம்
🙏🙏இறைவனிடம்🙏🙏
அவர் தந்த மனிதபிறவியே
வரம் தான் என்று உணராமல்…!
9 of 46
சரியான தருணத்திற்காக
காத்திருக்காமல்.
கிடைத்த தருணத்தை சரியாக
பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்…!
10 of 46
அம்மா அப்பா தவிர
அனைத்து உறவுகளும்
தேவை நிமிர்த்தம் வந்து
வந்த நிமிர்த்தம் தந்து
போகிறார்கள் வலிகளை.
11 of 46
பொய் பேசித் தான் நல்லவனாக
இருக்க வேண்டும் என்றால்,
நான் மெய் பேசி கெட்டவனாகவே
🦅இருந்து விடுகிறேன்🦅
12 of 46
அனுபவசாலிகளின்
அறிவுரைகளை கேட்டுக்கொள்.
அவை உனக்கு வெற்றியை தராவிட்டாலும்,
உன் தோல்வியை தடுக்கும்.
13 of 46
மற்றவர்கள் வலியை உணர
மகானாக இருக்க வேண்டிய
அவசியம் இல்லை.
மனிதம் உள்ள மனிதனாக
இருந்தாலே போதும்….!
14 of 46
முதல் போல் முடிவு வரை
வாழ்வது கூட,
வாழ்நாள் சாதனை தான்.
15 of 46
ஒரு விதையை இரண்டாக பிளந்து
நட்டால் அது மரம் ஆகாது…!
அதேபோல் ஒரு இதயத்தை இருவருக்கு
கொடுத்தால் அது காதல் ஆகாது…!
16 of 46
ஆசைகளை துறந்தவர்
எல்லாம் புத்தர் என்றால்.
மிடில் கிளாஸ்சை சேர்ந்தவர்
எல்லாம் புத்தர்கள் தானே.
17 of 46
பட்ட மரத்தின் மீது பச்சைக்கொடி
படர்ந்தாலும் பட்டமரம் பட்டமரம் தான்.
காயப்படுத்தி விட்டு மருந்து போட்டு
மறந்து விடு என்றால்! எப்படி மறப்பது?
18 of 46
அன்புக்காக கை ஏந்தும் கரங்களை
அலட்சியமாய் உதறித் தள்ளுவதும்
ஒரு வகையில் கொலை தான்…!
19 of 46
அன்பு காட்டுவது தவறில்லை.
யார் மீது அன்பு காட்டுவது
என்பதில் தான் தவறு செய்கிறோம்.
20 of 46
ஏங்குவது அன்புக்காக.
ஏமாற்றப்பட்டது அன்பினால்.
தேடியும் கிடைக்கவில்லை.
தேடி வந்ததும் நிலைக்கவில்லை.
21 of 46
வாடிய செடிக்கு கண்ணீர் விடாமல்.
வாடப்போகும் செடிக்கு தண்ணீர் விடுங்கள்.
22 of 46
நான் எப்போதும் அடிமை தான்.
உண்மையான அன்புக்கு மட்டும்.
23 of 46
கொடுத்தாலும் வாங்கினாலும்
பிரச்சினை தான்.
கொடுத்தால் உறவு தேயும்.
வாங்கினால் மரியாதை தேயும்.
🙏🙏🙏கடன்🙏🙏🙏
24 of 46
தெலைந்த பொருளை தேடுவதும்
தெலைத்த உறவை தேடுவதும்.
கடந்து போன பஸ்சுக்கு
கைகாட்டுவதும் ஒன்று தான்.
25 of 46
கேட்ட பின் உதவுவது அழகு.
கேட்கும் முன் தேவை அறிந்து
உதவுவது பேரழகு💖…!
26 of 46
எண்ணங்கள் எண்ணங்களால் இனைந்தால்,
ஆட்சி அதிகாரம் எல்லாம்
அட்ரஸ் இல்லாமல் போய்விடும்.
27 of 46
கண்கள் அறிந்த குற்றத்தையும்
இல்லை என்று மறைக்கிறது.
இந்த பொல்லாத உலகம்.
28 of 46
உண்மையா இருக்கணும் என்பதில்
ஜெய்த்து விடுகிறேன். ஆனால்,
அதே உண்மையை எதிர்பார்க்கும்
போது தோற்று விடுகிறேன்…!
29 of 46
ஏமாற்றும் போது
ஒன்றை மட்டும்
நினைவில் கொள்.
ஒரு நாள் நீயும்
ஏமாற்ற படுவாய்..!
இது நிதர்சனம்…!
30 of 46
எதிரி தொலைவில் இருப்பான்.
துரோகி பக்கத்தில் தான் இருப்பான்.
நினைவில்கொள் மறந்து விடாதே.
31 of 46
குறை சொல்பவனுக்கு விளக்கம் சொல்லி
நேரத்தை விரையம் ஆக்காமல்.
அவன் அவன் மனம் போல் எண்ணி
கொள்ளட்டும் என்று எண்ணி
நகர்ந்து விடுவது தான் நல்லது.
32 of 46
துன்பத்தில் தூரமாக இருந்தவன்,
இன்பத்திலும் தூரமா இருக்கட்டும்.
நெருங்க அனுமதிக்காதே…!
33 of 46
வெற்றி மட்டுமே வாழ்க்கை ஆனால்,
உலகம் தெரியாது உறவு புரியாது.
ஒரு முறை தோற்றுப்பார்
உலகம் தெரியும் உறவு புரியும்….!
34 of 46
நடித்து
பேசுபவர்களிடம்
மனம் திறந்து
பேசிடாதே.
மனம் திறந்து
பேசுபவர்களிடம்
நடித்து பேசிடாதே.
35 of 46
நடிக்க தெரிந்தவருக்கு வாழ்க்கை
எப்போதும் சொர்க்கம் தான்.
நடிக்க தெரியாதவருக்கு வாழ்க்கை
எப்போதும் நரகம் தான்….!
36 of 46
விளக்கின் பின் படர்ந்திருக்கும் இருள்
யாருக்கும் தெரிவது இல்லை.
அது போல் சிரிப்பின் பின் சிதறி கிடக்கும்
சோகம் யாருக்கும் புரிவது இல்லை.
37 of 46
துன்பமும் வறுமையும் வரும் காலத்தில்,
ஊரின் நடுவே உறவின் நடுவே
வாழ்வதை விட,
காட்டின் நடுவே கொடிய விலங்கின்
நடுவே வாழ்வது சிறந்தது.
38 of 46
எதிர்பார்ப்பு இல்லாத
வாழ்க்கையும் இல்லை.
எதிர்பார்ப்பது எல்லாம்
வாழ்க்கையும் இல்லை.
39 of 46
பாசம் நேசம் எவ்வளவு தான்
வைத்திருந்தாலும்.
தேவை முடிந்த பின் அல்லது
பணம் தீர்ந்த பின் நீங்கள்
யாரோ ஒருவர் ஆகிவிடுவீர்கள்.
40 of 46
காயப்படுத்த பலர் இருந்தாலும்.
ஆறுதல் சொல்ல சிலர்
இருப்பதால் தான்.
நம் வாழ்க்கை அடுத்த
கட்டத்தை நோக்கி செல்கிறது…!
41 of 46
கோபமே வராவிட்டால் கோமாளி.
கோபம் மட்டுமே வந்தால் மிருகம்.
இந்த உலகத்தின் பார்வையில்…!
42 of 46
கருவறையில் தொடங்கிய போராட்டம்,
முடிவிலி போல் தொடர்கிறது.
கல்லறையிலாவது முடியுமா?
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
43 of 46
உன் வாழ்க்கையில் வெளிச்சம்
இல்லை என்று கவலைப்படாதே.
நீ வெளிச்சத்தைப் பார்க்க வேண்டும்
என்றால், கட்டாயமாக இருள் வேண்டும்.
44 of 46
எதற்கும் கவலைப்படாதீர்கள்.
கவலை உங்களை அழித்து விடும்.
நடப்பது நடந்தே தீரும். வருவது வந்தே தீரும்.
45 of 46
கால நேரம் கூடும்போது
காலன் வந்து தடுத்தாலும்
காரியம் கைகூடும்.👍👍👍
46 of 46
வாழ்க்கை எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது, ஆனால் நம் சிந்தனைகள் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை தீர்மானிக்கின்றன. இந்த வாழ்க்கை சிந்தனைகள் – Life Quotes in Tamil உங்கள் நாளுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை தரும் என்று நம்புகிறேன். சிந்தனைகளை மாற்றினால் வாழ்க்கையும் மாறும்!
Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.