வருகிறபோது:
நல்லது ஆமை வேகத்தில் வருகிறது.
கெட்டது புல்லட் வேகத்தில் வருகிறது.
போகிறபோது:
கெட்டது ஆமை வேகத்தில் போகிறது.
நல்லது புல்லட் வேகத்தில் போகிறது.
என்ன வாழ்க்கை டா இது.
யாரோ ஒருவனின் விமர்சனத்துக்கு
உன்னை நீ மாற்றிக்கொள்ளாதே.
நீ தோற்றால் பைத்தியக்காரன் என்பான்.
நீ வெற்றி பெற்றால் அதிர்ஷ்டசாலி என்பான்.
அவனைக் கண்டுகொள்ள தேவை இல்லை.
அவனால் உன்னை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது.
நிமிர்ந்து நிற்பது பலமும் அல்ல,
வளைந்து கொடுப்பது பலவீனமும் அல்ல,
நிமிர்ந்து நிற்கும் வேலைவிட,
வளைந்து கொடுக்கும் வில் அம்பு
பாயும் தூரம் அதிகம்🏹.
கோபத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.
கோபம் நம்மை கட்டுப்படுத்தினால்
ஆபத்து நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு
மட்டும் அல்ல, நமக்கும் தான்.
இளமையில் இருக்க கூடாத இரு
விசயங்கள்: 👉கோபம் 👉சோம்பல்.
முதுமையில் இருக்கக்கூடாத இரு
விசயங்கள்: 👉தனிமை 👉கடன்.
முன்பு எதற்கெல்லாம் கோபம் வந்ததோ,
இப்போது அதை எல்லாம் சிரித்து
கடக்க பழகி விட்டது மனம்.
விரக்தியா பக்குவமா என்று தான் தெரியவில்லை.
குளத்தை கலக்குவது
அனைவராலும் முடியும்.
அதை தெளிய செய்வது
குளத்தால் மட்டுமே முடியும்.
நம் மனமும் அப்படித்தான்💗.
அடிமைப் படுத்தா அன்புகள்!
கனம் தரா காலங்கள்!
ரணம் தரா ரசிப்புகள்!
வதம் செய்யா வார்த்தைகள்!
கள்ளமில்லா கருவிழிப் பார்வைகள்!
தொல்லை தரா தோள் சாய்ப்புகள்!
நெருடலில்லா நினைவுகள்!
பாசாங்கில்லா பாசங்கள்!
கிடைக்கப் பெறுதல் பேரழகே…!











