Life Quotes In Tamil | வாழ்க்கை கவிதைகள் | வாழ்க்கை அறிவுரை கவிதைகள்
பிறப்பின் வலியை
உணர முடியவில்லை.
ஆனால், வாழும் போதே
இறப்பின் வலியை
அனு அனுவாக
உணர முடிகிறது.
எது எப்போது, யார் யாருக்கு
என்று தெரியாத உலகில்,
நம்மில் நிலைத்திருக்க வேண்டியது
மனிதநேயம் ஒன்று மட்டுமே.
தவிர்க்க முடியாத தேவை ஒன்று:
சில தன்மானத்தை விட்டு,
சில அவமானத்தை விலைக்கு
வாங்க வைத்து விடுகிறது.
வேதனை கொடுத்தவரை வேறு
வழி இன்றி மறந்து விடலாம்.
ஆனால், அவரால் நம் மனது பட்ட
வேதனையும் வலியும் ஓரு போதும்
மறந்து விட முடிவதில்லை.
காலம் என்பது கண்ணீரை மட்டும்
அல்ல காயத்தையும் மாற்றும்.
கேள்வியை மட்டும் அல்ல
பதிலையும் மாற்றும்.
காலம் எதையும் மறக்க செய்வதில்லை.
ஏற்றுக்கொண்டு கடந்து போகும்
பக்குவத்தை தந்துவிடுகிறது.
யார் மனதையும் காயப்படுத்தாத
வரை நம் சிரிப்பு அழகு.
யாரிடமும் காயப்படாத வரை
நம் மனது அழகு.
வாழ்க்கையில் பலர் வந்து போவர்,
மதிப்பும் மரியாதையும் தந்து போவர்,
நலமுடனும், வளமுடனும் வாழ்ந்தால்.
இல்லை கைகட்டி நின்றவனும்
கால்எட்டி மிதிப்பான்.
மனது புரியவில்லை என்றால்
பேசி புரிய வைக்கலாம்.
பேசியும் புரியவில்லை என்றால்,
அமைதியாக கடந்து விடுவது நல்லது.
ஏமாற்றத்தையும் இழப்பையும்
மட்டுமே எதிர் கொண்டவன்,
வாழ்வில் வீசும் புயல்களை
கண்டு ஒருபோதும் அஞ்சுவதில்லை.
பிடிக்கவில்லை என்பதற்கு
காரணங்கள் அதிகம்.
பிடிக்கிறது என்பதற்கு
காரணங்கள் குறைவு.
வாழ்க்கை இது தான்.
நண்பா நேரம் பொன் போன்றது
கடமை கண் போன்றது.
எக்காரணம் கொண்டும்
நேரத்தை தள்ளி போடாதே.
கடமையை கண்ட உடன் செய்.
எங்கு செல்ல வேண்டும் என்றாலும்,
இரண்டு மணி நேரம் முன் செல்.
இரண்டு நிமிடம் கூட பின் செல்லாதே.
எப்படி இருக்கீங்க என்ற கேள்விக்கு:
“ஏதோ இருக்கிறேன்” என்பது,
பணம் சார்ந்த பதில்.
“சூப்பரா இருக்கிறேன்” என்பது
மனம் சார்ந்த பதில்.
தொலைத்து விட்டதை தேடு.
தொலைத்து விட்டு
சென்றதை தேடாதே💗.
அசிங்க படுத்திய பின், அன்பு
காட்டுவதும், அரவனைப்பதும்,
செத்த பின் உயிர் கொடுக்க
முயற்சி செய்வதற்கு சமம்.
மனிதனை வெறுக்காதே.
வேண்டும் என்றால்
அவன் குணங்களை
வெறுத்துக் கொள்.
செய்து முடிக்கப்பட்டது செய்து
முடிக்கப்பட்டது தான்.
எதுவாக இருந்தாலும் செய்யும்
முன் யோசிப்பதே சிறப்பு.
நண்பா காதில் கேட்பதை எல்லாம்
உணர்ந்து புரிந்து கொள்.
ஆனால்,
கேட்டதை எல்லாம் பேசிவிடாதே.
நம் மனம் என்ற படகில் ஆணவம்,
ஆங்காரம் என்ற ஆட்கள் இல்லை
என்றால், நம் படகுக்கு தடையும்
இல்லை எடையும் இல்லை.
மனிதர்கள் முன்பு நல்ல பெயர்
வாங்குவதை விட,
மனசாட்சி முன்பு நல்ல பெயர்
வாங்க முயற்சி செய்வதே சிறப்பு.